இந்தியாவின் முதல் ரயில் பல்கலைக்கழகம் குஜாராத்தில் அமைக்கப்படுகிறது..!
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே வழித்தடத்தைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இத்துறையில் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக இருப்பது மட்டும் அல்லாமல் இத்துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியும் அடையவில்லை.
இந்தியாவில் அதிநவீன அதிவேக புல்லட் ரயில் அமைக்கப்படும் இத்தருணத்தில் இத்துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு திட்டமிட்ட வழியில் கொண்டு செல்ல மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

ரயில்வே துறைக்காகத் தனிப்பட்ட பல்கலைக்கழகம் இந்தியாவில் முதல் முறையாக அமைக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
இப்புதிய பல்கலைக்கழகம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் பரோடா நகரில் அமைய உள்ளது.


Click it and Unblock the Notifications