2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சாமானியர்களுக்கும், மாத சம்பளக்காரர்களுக்கு அதிகப் பலன் அளிக்கும் என்று மத்திய அரசு அறிவித்த 40,000 வரிச் சலுகை கொண்ட Standard Deduction மூலம் மக்களிடம் இருந்து கூடுதல் வரியைப் பிடுங்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
ஆம், தற்போது மாத சம்பளக்காரர்களுக்குப் போக்குவரத்துப் படியாக 19,200 ரூபாயும் மற்றும் மருத்து செலவுகளுக்காக 15,000 ரூபாய் அளவிலான தொகைக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும். இப்போது Standard Deduction அறிவிக்கப்பட்டதன் மூலம் இவ்வரிச் சலுகையும் நீக்கப்பட உள்ளது.

இதனுடன் தற்போது Education Cess வரி 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் அதிகளவிலான பணத்தை வரியாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிகிறது.
ரூ.5 லட்சத்திற்கு அதிகமாகச் சம்பளம் பெறுவோர்கள் அனைவரும் தற்போது செலுத்தும் வரி அளவுகளை விடவும் கூடுதலான வரியைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள் என்பது பட்ஜெட் அறிவிப்புக்குப் பிந்தை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
10 வருடத்திற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அப்போது நிதியமைச்சராக இருந்த பி.சதம்பரம் Standard Deduction என்ற பெயரில் மாத சம்பளக்காரர்களுக்கு வருடத்திற்கு 20,000 ரூபாய் வரையிலான தொகைக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்ததைத் திரும்பப் பெற்றார்.
தற்போது மோடி அரசு மீண்டும் இதனை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. மோடி அரசு அறிவித்துள்ள இப்புதிய அறிவிப்பின் மூலம் மக்களுக்குக் கூடுதல் சுமையாகவே உள்ளது. பொதுவாக மோடியின் திட்டங்களால் தோல்வியில் முடியும், ஆனால் இந்த முறை மக்களுக்குக் கூடுதல் சுமை அளித்துள்ளது.
இந்நிலையில் எந்தெந்த வரிக்கு எவ்வளவு வரி கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். ( 5 லட்சம் வரையிலான வருமானம் கொண்டவர்கள் மட்டும் வருடத்திற்கு 177 ரூபாய் சேமிக்க முடியும்).
5 லட்சம் சம்பளம் வாங்குபவர்களுக்கான வரி விலக்கு

ரூபாய் 25 லட்சம் சம்பளம் வாங்குபவர்களுக்கான வரி விலக்கு

ரூபாய் 65 லட்சம் சம்பளம் வாங்குபவர்களுக்கான வரி விலக்கு

ரூபாய் 1.2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குபவர்களுக்கான வரி விலக்கு

More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications