போன வருடத்தை விடவும் குறைவான நிதி ஒதுக்கீடு.. பாதுகாப்பு துறைக்குக் காட்டும் மெத்தனம்..!

பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவிப்புகள் ஏதும் அறிவிக்கவில்லை.

ஆனால் அரசு இதற்கான முடிவுகளை முன்கூட்டியே எடுத்துள்ளது.

பாதுகாப்புத் துறை

பாதுகாப்புத் துறை

பாதுகாப்புத் துறைக்காக மத்திய அரசு 2018-19 நிதியாண்டில் சுமார் 2.95 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் பாதுகாப்பு துறைக்காக 2.74 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தற்போது 7.8 சதவீதம் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

2.95 லட்சம் கோடி ரூபாய்

2.95 லட்சம் கோடி ரூபாய்

இத்தொகையில் 1.85 லட்சம் கோடி ரூபாய் ராணுவ அதிகாரிகளின் சம்பளம், பயிற்சி, மற்றும் பிற சேவைகளுக்காகச் செலவிடப்பட உள்ளது.

93,000 கோடி ரூபாயை மூலதன செலவீடாக வைக்கவும், 16,000 கோடி ரூபாயை இதர செலவுகளுக்காகச் செலவிட ஒதுக்கப்பட்டுள்ளது.

 

பென்ஷன்

பென்ஷன்

இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்காக அளிக்கப்படும் பென்ஷனுக்காக 1.08 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. இது கடந்த நிதியாண்டை விடவும் 26.6 சதவீதம் அதிகமாகும்.

ஜிடிபி

ஜிடிபி

நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் கடந்த ஆண்டு 1.62 சதவீதம் வரையில் பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, 2018-19 நிதியாண்டுக்கு வெறும் 1.57 சதவீதம் தொகை மட்டுமே நிதியதவி செய்துள்ளது.

இதனை மறைக்கவே பட்ஜெட் தாக்கலின் போது அதனை அறிவிக்கப்படாமல் தவிர்த்திருக்க வேண்டும் எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

பட்ஜெட்டுக்கு முன்

பட்ஜெட்டுக்கு முன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+