உலகச் சந்தைக்கு போகும் இந்தியாவின் ‘தம்ஸ் அப்’!
கோகோ கோலா நிறுவனம் விரைவில் தங்களது இந்திய தாரிப்பான தம்ஸ் அப்பினை சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது. பார்லே பிஸ்லரி நிறுவனத்தினை 1993-ம் ஆண்டுக் கொகோ கோலா நிறுவனம் வாங்கியதை அடுத்துத் தம்ஸ் அப் குளிபானம் அமெரிக்க நிறுவனம் வசம் சென்றது.

சர்வதேச சந்தையில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் முதற்படியாகத் தம்ஸ் அப் குளிர்பானத்தினை அறிமுகம் செய்ய உள்ளனர். இந்திய பிராண்டுகளில் முதன் முறையாக 1 பில்லியன் டாலர் என 64,000 கோடி ரூபாய் மதிப்பில் 2020-ம் ஆண்டை இலக்காக வைத்து உலகச் சந்தையினை முற்றுகையிட இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.
கோகோ கோலா நிறுவனம் வசம் இந்தியாவின் 20 பிராண்டுகள் உள்ளது என்றும் அதில் தம்ஸ் அப்-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications