பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பும் சூழ்ச்சி தான்.. மக்களை ஏமாற்றிய மத்திய அரசு..!

2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியினை 2 ரூபாய் வரை குறைப்பதாக அறிவித்தார்.

ஆனால் அதன் பிறகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது குறையாது. ஏன் என்று கேட்பவர்கள் தொடர்ந்து படிங்க.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

எப்படி?

எப்படி?

மத்திய அரசு பட்ஜெட்டில் எரிபொருட்கள் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாய் மற்றும் கூடுதலாக 6 ரூபாய் கலால் வரி குறைக்கப்படும் என்றும் கூறி இருந்தாலும் சாலை மற்றும் கட்டுமான வரியினை உயர்த்தியுள்ளதால் 8 ரூபாய் ஒரு லிட்டருக்குக் கூடுதல் செலவு என்பதால் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

 பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் கோரிக்கை

பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் கோரிக்கை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் என மும்பையில் விற்கப்பட்ட போது பெட்ரோலிய துறை அமைச்சகமானது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியினைக் குறைக்க வேண்டும் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து இருந்தது.

சூழ்ச்சி

சூழ்ச்சி

நேற்று பட்ஜெட் அறிவிப்பின் பொது இதனைக் கேட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில் சாலை மற்றும் கட்டுமான வரியினை 8 ரூபாய் வரை உயர்த்தி மத்திய அரசு மக்களை ஏமாற்றியுள்ளது.

உலகச் சந்தை

உலகச் சந்தை

டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கின்றது. வெள்ளிக்கிழமை பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 69.08 டாலர் என்றும், WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 65.80 டாலர் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் பெட்ரோல்/டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல்/டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 75.82 ரூபாய் என்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 67.62 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே நேற்றும் பெட்ரோல் 75.77 ரூபாய் என்றும், டீசல் 67.62 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் ஏமாற்று வித்தை தான்..!

பட்ஜெட்டி-ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பும் மத்திய அரசின் ஏமாற்று வித்தை தான்..!

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+