சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன் விரைவில் அரசியலில் இறங்க உள்ள நிலையில் மத்திய பட்ஜெட் விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்கள் பக்கம் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது இரு இனிமையான பட்ஜெட் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
கருத்து
நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் மத்திய பட்ஜெட் குறித்து வெள்ளிக்கிழமை நடிகர் கமல் ஹாசனிடம் கேள்வி கேட்ட போது ‘எனக்குத் தெரிந்த வரை மத்திய அரசு விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களின் பக்கம் பட்ஜெட்டில் கவனம் செலுத்தி இருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
நடுத்தர மக்கள்
நடுத்தர மக்களும் முக்கியம் என்ற நிலையில் அவர்கள் மீது அலட்சியம் காட்டியிருக்கக் கூடாது என்று பின்னர்க் கூறினார்.
மகிழ்ச்சி
இருந்தாலும் மத்திய அரசு விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்கள் பக்கம் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மீண்டும் ஒரு முறை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications