மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமான பரிமாற்றத்திற்கு பான் எண் கட்டாயம்..!

பிப்.1ஆம் தேதி மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் அறிவிப்புகளில் (பாதிப்புகள்) இருந்து இன்னமும் வெளிவராத நிலையிலேயே மக்களுக்கு நெருக்கடி அளிக்கும் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

 பான் எண் கட்டாயம்

பான் எண் கட்டாயம்

இந்தியாவில் வரி அமைப்பிற்குள் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செய்யப்படும் பணப் பரிமாற்றம் அனைத்திற்கும் பான் எண் கட்டாயம் அளிக்க வேண்டும் என மத்திய அறிவித்துள்ளது.

ஏப்ரல்

ஏப்ரல்

மத்திய அரசின் இந்தப் புதிய அறிவிப்பு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு வருடத்திற்கானது..

இது ஒரு வருடத்திற்கானது..

ஒரு வருடத்தில் நீங்கள் செய்யும் நிதி பரிமாற்றத்தின் அளவு 2.50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்குப் பான் எண் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

அப்படி உங்களிடம் பான் எண் இல்லையெனில் பான் கார்டு பெறுவதற்காக அரசு உங்களை நிர்பந்தம் செய்யும்.

 

அனைத்துச் செலவுகளும்

அனைத்துச் செலவுகளும்

2.50 லட்சம் ரூபாய் என்பது ஒரு வருடத்தில் நீங்கள் செய்யும் அனைத்துப் பரிமாற்றங்களிலும் இதில் அடங்கும்.

அதாவது கார்டு பரிமாற்றத்தில் தங்க நகை, மளிகை பொருட்கள் வாங்கும் போது, மருத்துவச் செலவு, மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் போது என எதுவாக இருந்தாலும் 2.50 லட்சம் ரூபாய் கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளப்படும்.

 

பான் கார்டு கட்டாயம்

பான் கார்டு கட்டாயம்

இப்படி ஒருவர் செய்யும் செலவுகள் 2.50 லட்சம் ரூபாயை தாண்டினால் அதற்குக் கட்டாயம் பான் கார்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 அட்டாரசிட்டி

அட்டாரசிட்டி

மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தியது, ஆனால் தற்போது அறிவித்துள் பான் கட்டாயம் மக்களைப் பணத்தைக் கையில் கொடுத்துச் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளிவிடும் எனத் தெரிகிறது.

பொதுவாக மோடி அரசுக்கு ஒரு தோல்வியை மறைக்க மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு தோல்வியை மறைக்கும் வழக்கம் உள்ளது. இந்தப் பான் கார்டு கட்டாயமும் இதைத் தான் காட்டுகிறது.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+