2017-ம் ஆண்டு 7,000 இந்திய கோடிஸ்வரர்கள் வெளிநாட்டுக்கு மூட்டை கட்டிக்கொண்டு சென்றுள்ளார்கள்!

உலகம் முழுவதும் கோடிஸ்வரர்களாக உள்ளவர்கள் ஒரு நாட்டினை விட்டுப் பிற நாட்டுக்கு வெளியேறுவது என்பது ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

அப்படிச் சீனாவில் இருந்து அதிகபட்சமாக வெளியாகியுள்ளதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா என்றும் தரவுகள் கூறுகின்றன. எனவே எந்த நாடுகளில் இருந்து அதிகமாக வெளியேறியுள்ளார்கள், எந்த நாடுகளுக்கு அதிகமாகச் சென்றுள்ளார்கள் என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

இந்தியா

இந்தியா

உலகச் செல்வம் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2017-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 7,000 நபர்கள் வெளியாகியுள்ளனர். இதுவே 2016-ம் ஆண்டு 6,000 நபர்களும், 2015-ம் ஆண்டு 4,000 நபர்களும் கோடிஸ்வரர்கள் வெளியேறியுள்ளனர்.

சீனா

சீனா

முதல் இடம் பிடித்துள்ள சீனாவில் இருந்து 2017-ம் ஆண்டு 10,000 கோடிஸ்வரர்கள் வெளியேறியுள்ளனர்.

பிற முக்கிய நாடுகள்

பிற முக்கிய நாடுகள்

துருக்கியில் இருந்து 6,000 நபர்களும், ஐக்கிய இராஜியத்தில் இருந்து 4,000, பிரான்ஸ் 4,000 மற்றும் ரஷிய கூட்டமைப்பு 3,000 நபர்கள் என வெளிநாடுகளுக்குக் கோடிஸ்வரர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு 10,000 கோடிஸ்வர்கள் புலம் பெயர்ந்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக அமெரிக்காவை பின்தள்ளி ஆஸ்திரேலியா முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் செல்வ மதிப்பானது 83 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமரிக்காவில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

பிரபலமான வெளிநாடுகள்

பிரபலமான வெளிநாடுகள்

அமெரிக்கா 9,000, கனடா 5,000 மற்றும் ஐக்கிய அமீரகம் 5,000 நபர்கள் என 2017-ம் ஆண்டுக் கோடிஸ்வரர்கள் இந்த நாடுகளுக்குப் புதிதாக வந்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+