சென்னை: இந்திய தனிநபர் அடையாள ஆணையம் பிளாஸ்டிக் மற்றும் லேமிடேடட் ஆதார் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
ஆதார் கார்டினை பிளாஸ்டிக் அல்லது லேமினேட் செய்து பயன்படுத்தும் போது QR குறியீடு செயல்படாமல் போக வாய்ப்பு இருப்பதாகவும், தனிநபர் விவரங்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆதார் ஆணையம் கூறியுள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அசல் ஆதார் எது?
ஆதார் ஆணையம் வீட்டிற்கு அஞ்சல் மூலம் அனுப்பிய ஆதார் கார்டு அல்லது இணை-யத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுக் காகிதத்தில் அச்சிடப்பட்டு இருப்பதே மற்றும் செல்லுபடியாகக் கூடிய ஆதார் கார்டு என்று தெரிவித்துள்ளனர்.
கட்டணம்
எனினும் ஆதார் அணையத்திடம் அனுமதியில்லாமல் பிளாஸ்டிக் ஆதார் கார்டு அச்சிட்டுத் தருவதாகக் கூறும் நிறுவனங்கள் 50 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வசூலிக்கின்றன.
QR குறியீடு செயல்படாது
பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் அச்சிடும் போது QR குறியீடு செயல்படாமல் போய்விடும் என்றும் எனவே இது போன்று கடைகளில் ஆதார் கார்டினை தேவையில்லாமல் அச்சிட வெண்டாம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
திருட வாய்ப்பு
இதுபோன்ற இடங்களில் பிளாஸ்டிக் அல்லது லேமினேஷன் செய்யும் போது உங்களது தனிநபர் ஆதார் விவரங்களைத் திருடும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
தேவையில்லை
இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே பிளாஸ்டிக் ஆதார் கார்டு அச்சிடுவது தேவையில்லாத ஒன்று என்றும் தேவைப்பட்டால் பேப்பரில் மட்டும் அச்சிட்டுப் பயன்படுத்துவது மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கூறினார்.
பிளாஸ்ட்க் ஆதார் கார்டு வழங்கப்படுமா?
மத்திய அரசுக்குத் தற்போது வரை பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்குவது குறித்து எந்த எண்ணமும் இல்லை என்றும் பாண்டே கூறினார்.
பகிர வேண்டாம்
எனவே பிளாஸ்டிக் ஆதார் கார்டினை அச்சிட, லேமினேட் செய்ய அல்லது பிற காரணங்களுக்காக உங்கள் ஆதார் கார்டு எண் மற்றும் விவரங்களை யாருடனும் பகிர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
ஆதார் விவரங்களைப் பெற அனுமதி இல்லாத யாராவது பொது மக்களிடம் ஆதார் கார்டு விவரங்களைப் பெற்று சேமித்து வைத்து இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications