மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் சம்பந்தப்பட்ட கவலை ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைக்குப் பயன் கிடைக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
2018 ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு ஊதிய உயர்வு அளிக்கும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஏப்ரல் முதல் ஊதிய உயர்வு வருமா?
ஏப்ரல் மாதம் முதல் ஊதிய உயர்வு அளிக்க அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் கூறுகின்றன. ஒருவேலை இது சாத்தியமானால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயன் பெறுவார்கள்.
யாருக்கெல்லாம் ஊதிய உயர்வு கிடைக்கும்?
ஊழியர்களின் நிலை 1 மற்றும் 5வது பே மேட்ரிக்ஸ் பேண்டு கீழ் வருபவர்களுக்கு ஊதியம் மாற்றி அமைக்கப்படும். இந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அதிகச் சம்பளம் கிடைக்கும்.
பாக்கி
மத்திய அமைச்சகம் என்ன தான் ஊதிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டாலும் 2018 ஏப்ரல் 1 முதல் தான் வழங்கும். அரியார்ஸ் எனப்படும் பாக்கி ஏதும் கிடைக்காது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நன்மைகள்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு 34 கொடுப்பனுவுகளில் மற்றம் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications