உணவு துறை அமைச்சகம் சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 100 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் குறைவான விலையில் சர்க்கரையினை இறக்குமதி செய்வது குறையும் என்றும் மொத்த விலை சந்தையில் குறைந்து வரும் சர்க்கரையின் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீது வரி விதித்துள்ளதால் இந்திய கரும்பு விவசாயிகளுக்குக் கூடுதலான லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
விலை
2017-2018 நிதி ஆண்டில் மொத்த விலை சந்தையில் சர்க்கரையின் விலை அதிகளவில் குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 40 முதல் 42 ரூபாய் வரை சர்க்கரை விற்கப்பட்டது.
வரி
உள்நாட்டுக் கரும்பு விவசாயிகளைக் காக்கும் படி சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
அறிவிப்பு
வரி உயர்வு குறித்து அறிவிப்பினை விரைவில் வெளியிட இருப்பதாக அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரம் உற்பத்தி அதிகம் என்ற காரணத்தினால் தான் விலை குறைந்துள்ளது என்றும் இது தற்காலிகமானது தான் என்றும் கூறிவருகின்றனர்.
உற்பத்தி
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியானது 4 சதவீதம் என உயர்ந்து 26.1 மில்லியன் டன்னாக இருப்பதாகவும் இதுவே 2016-2017 நிதி ஆண்டில் 20.3 பில்லியன் டன்னாக் இருந்ததாகவும் தரவுகள் கூறுகின்றன.
நுகர்வு
அதே போன்று நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 25 மில்லியன் டன் சர்க்கரையினை மக்கள் நுகர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications