பஞ்சாப் நேஷனல் வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. நிகர லாபம் 11.1% ஆக உயர்வு..!
பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கி மூன்றாவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் நிகர லாபமானது 11.1 சதவீதம் உயர்ந்து 230 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச வணிகத்தில் இருந்து 2017 டிசம்பர் மாதம் 11 கோடியினைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மூன்றாம் காலாண்டில் வெளிநாட்டுக் கிளைகளில் 5.9 சதவீதம் டெபாசிட்கள் அதிகரித்து 6.48 லட்சம் கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது. இதுவே சென்ற ஆண்டு 6.12 லட்சம் கோடியாக இருந்தது.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில்12.11 சதவீதமாக இருந்த வரா கடன் மதிப்பீடு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 13.31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 7.55 சதவீதமாகக் குறைந்து இருந்தது.


Click it and Unblock the Notifications