2018-19ஆம் நிதியாண்டு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு நடக்கும் முதல் நாணய கொள்கை கூட்டம் என்பதால் வர்த்தகச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியிலும் இதுகுறித்து அதிகளவிலான எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
நாணய கொள்கை கூட்டம்
புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு வெளியாகும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் தான் அடுத்த 2 மாத வர்த்தகச் சந்தையைத் தீர்மானிக்கும்.
நாணய கொள்கை முடிவில் மக்கள் வங்கியின் பெற்ற கடன்களின் ஈஎம்ஐகளில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகள் குறைவு
தற்போது சந்தையின் பல்வேறு காரணிகளை வைத்துப் பார்க்கும்போது ரிசர்வ் வங்கி இன்று முடிவு பெறும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தாது எனத் தெரிகிறது.
முக்கியமான பிரச்சனை
இன்றைய கூட்டத்தில் நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைப் பெரிய அளவில் விவாதிக்கும் எனவும் தெரிகிறது.
2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையின் அளவு ஜிடிபி-யில் 3.3 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், இதனைக் குறைக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையான முயற்சிகளைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ரெப்போ விகிதம்
தற்போது ரெப்போ விகிதம் 6 சதவீதமாக இருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் வட்டி உயர்வு இருக்காது என 15இல் 14 பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் 0.25 சதவீத வட்டி உயர்த்தப்படும் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications