பட்ஜெட்டுக்குப் பின் நடக்கும் முதல் நாணய கொள்கை கூட்டம் என்பதால் அனைத்துத் தரப்பினரும் மிகவும் ஆர்வமாக இருந்த நிலையில், இன்று வெளியான நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் நாணய கொள்கை அமைப்பு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ரெப்போ விகிதம்
நாணய கொள்கை அமைப்பு ரெப்போ விகிதத்தைப் பணப்புழக்க ஈடுசெய்யும் தளத்திலேயே(LAF) வைக்க முடிவு செய்துள்ள காரணத்தால் ரெப்போ விகிதம் 6.0 சதவீதமாகவே அடுத்த இரு மாதங்களுக்கு நீடிக்கும்.
எம்எஸ்எப் விகிதம்
இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும், எம்எஸ்எப் மற்றும் வங்கி விகிதம் 6.25 சதவீதமாகத் தொடரும் என நாணய கொள்கை கூட்டம் இன்று அறிவித்தள்ளது.
பணவீக்கம்
இந்த முடிவை நாணய கொள்கை கூட்டம் நுகர்வோர் பணவீக்க அளவுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஈஎம்ஐ
நாணய கொள்கை அமைப்பின் இந்த முடிவையொட்டி வங்கிகளில் கடன் வாங்கியுள்ளவர்களின் மக்களின் ஈஎம்ஐயில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இது மக்களுக்குச் சோகமாகச் செய்தியாகவே அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications