பொதுவாக ஊழியர்களின் சம்பளம் நிறுவனத்தின் வளர்ச்சியை அடைப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் உயரும். இந்தச் சம்பள உயர்வைப் பெறுவதில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். இதில் ஒரு நிறுவனத்தின் தலைவர்களும், சில இடங்களில் நிறுவனர்கள் கூட அடக்கம்.
ஆனால் சிலர் மட்டுமே சம்பளம் என்னும் சிறிய பெட்டிக்குள் அடங்காமல் தனக்குப் பிடித்தவற்றை எவ்விதமான பணமும் எதிர்பார்க்காமல் பணியாற்ற முடியும். இப்படிப்பட்டவர்களில் சிலர்.
எலான் மஸ்க்
செல்லும் இடமெல்லாம் சிறப்புப் போல, தொட்டது எல்லாம் வெற்றிகரமானதாக மாற்றும் வழக்கத்தைக் கொண்ட எலான் மஸ்க். தற்போது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஹைப்பர்லூப், நியூராலிங்க், ஓப்ன்ஏஐ, தி போரிங் கம்பெனி, சோலார் சிட்டி ஆகிய நிறுவனங்களைத் துவங்கி நிர்வாகத் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது ஒரு வருடத்திற்கான சராசரி சம்பளம் வெறும் 50,000 அமெரிக்க டாலர் தான். இது கலிப்போரினியா மக்களின் சராசரி சம்பள அளவாகும்.
இன்றைய இளைஞர்களுக்கு இவர்தான் சூப்பர்ஸ்டார்.
லேரி பேஜ்
இணைய உலகத்தைப் புரட்டி போடும் அளவிற்குக் கூகிள் என்னும் மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கிய லேரி பேஜ், தற்போது ஆல்பபெட் என்னும் மற்றொரு நிறுவனத்தை உருவாக்கி வரும் காலத்திற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவரின் சம்பளம் வெறும் 1 டாலர் தான், மாதத்திற்கு அல்ல வருடத்திற்கு.
மார்க் ஜூக்கர்பெர்க்
லேரி பேஜ் போலவே பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-ம் 2013ஆம் ஆண்டுக்கு 7,70,000 டாலர் சம்பளத்தைப் பெற்று வந்த நிலையில் அதனை முழுமையாகு குறைந்து வெறும் 1 டாலர் சம்பளம் போதும் எனக் கூறினார்.
அன்று முதல் இன்று வரையில் வெறும் 1 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்.
ரிச்சார்ட் பேர்பேங்க்
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளின் ஒன்றான கேப்பிடல் ஒன் வங்கியின் தலைவரா விளங்கும் ரிச்சார்ட் பேர்பேங் கடந்த 21 வருடமாக எவ்விதமான சம்பளமும் பெறவில்லை, இதற்கு மாறாக நிறுவனப் பங்குகளைப் பெறுகிறார்.
இன்றைய நிலையில் இவரது மொத்த சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலர்.
ஜாக் டோர்சி
டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சீஇஓ, கிரெடிட் கார்டு இயக்க நிறுவனமான ஸ்கொயர் நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார் ஜாக் டோர்சி.
டிவிட்டர் நிறுவனத்தில் சம்பளமாக ஒரு டாலர் கூடப் பெறாத ஜாக் ரோட்சி, ஸ்கொயர் நிறுவனத்தில் 2.75 டலாரை சம்பளமாகப் பெறுகிறார்.
ஈவென் ஸ்பிகெல்
ஸ்னாப்சாட் நிறுவனத்தின் தலைவரான ஈவென் ஸ்பிகெல் அவர்களும் வெறும் 1 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்.
நிக் வுட்மேன்
கோப்ரோ நிறுவனத்தின் தலைவரான நிக் வுட்மேன் பிற டெக் நிறுவனங்களின் தலைவர்களைப் போலவே வருடத்திற்கு வெறும் 1 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்.
ஜான் கோம்
பேஸ்புக் ஆதிக்கத்தைக் குறைக்கும் அளவிற்கு உயர்ந்த வாட்ஸ்அப் நிறுவனத்தைப் பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் சந்தமில்லாமல் வாங்கிவிட்டார். ஆனாலும் இன்றைய நாள் வரையில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் அனைத்து நிர்வாகப் பணிகளும் ஜான் கோம் கையில் தான் உள்ளது.
இவரும் வருடத்திற்கு 1 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ளனர்.
ஜான் கேக்கி
சமீபத்தில் அமேசான்.காம் தனது வர்த்தகத்தை நேரடியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியாக ஹோல் புட்ஸ் மார்கெட் நிறுவனத்தை முழுமையாக வாங்கியது.
இந்நிறுவனத்தின் தலைவரான ஜான் மேக்கி ஒரு டாலருக்கும் குறைவான அளவிற்கே சம்பளம் வாங்குகிறார். மேலும் இவருக்குக் கொடுக்கப்பட்ட பங்குகள் அனைத்தும் நிறுவனத்தின் இரு தொண்டு நிறுவனங்களுக்கும் கொடுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications