ஒன்று கூடியது ஏர்டெல், வோடபோன், ஐடியா.. சிக்கிக்கொண்ட ஜியோ..!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை மிகப்பெரிய அளவில் இருந்தாலும் பல கோடி பேர் இன்னமும் ப்யூச்சர் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

டெலிகாம் சந்தையில் தற்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சந்தையில் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் எனக் கங்கனம் கட்டிக்கொண்டு மொபைல் சேவை நிறுவனங்கள் இருக்கிறது.

இந்நிலையில் ஜியோவிற்குப் போட்டியாக முக்கியத் திட்டத்தில் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களும் ஈடுபட்டு வருகிறது.

முதன் முதலில்

முதன் முதலில்

முதன் முதலில் ப்யூச்சர் போன்களுக்கு (கீப்பேட் கொண்ட சிறிய ரகப் போன்கள்) இந்தியாவில் பெரிய அளவில் சந்தை உள்ளது, இதனை வர்த்தகமாக மாற்றுவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான லாபத்தைப் பெறலாம் எனக் கண்டறிந்து, புதிய திட்டத்தை வடிவமைக்கத் துவங்கியது ஜியோ தான்.

ஜியோவுடன் போட்டி போடும் வகையில் தற்போது நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களும் இதே திட்டத்தில் பணியாற்றி வருகிறது.

 

மலிவான ப்யூச்சர் போன்

மலிவான ப்யூச்சர் போன்

ஜியோ மலிவான கட்டணத்தில் மலிவான விலையில் ப்யூச்சர் போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டது. ஆனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் வெறும் 500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போனையே கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.

 மாதம் 70 ரூபாய்

மாதம் 70 ரூபாய்

இந்தப் போன்களை வாங்குவோருக்கு ஒவ்வொரு மாதமும் 60-70 ரூபாய் கட்டணத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகள் வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.

ஜியோ

ஜியோ

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ப்யூச்சர் போனை ஜியோ போன் என்ற பெயரில் மாதம் 49 ரூபாயக்கு வாய்ஸ் கால் சேவை அளிக்க முடிவு செய்தது.

 எதற்காக ப்யூச்சர் போன்..?

எதற்காக ப்யூச்சர் போன்..?

மக்கள் அனைவரும் தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு மாறி வந்தாலும், இன்னும் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது கீபேட் போன் வைத்துள்ளார்கள். இவர்கள் மொத்த மொபைல் சேவை வாடிக்கையாளர்களின் பெரும் சதவீதம்.

தற்போது இவர்களைத் தங்களது நெட்வொர்க்கு இழுத்து வருவது தான் டெலிகாம் நிறுவனங்களின் முயற்சி.

 

இதுதான் லாபம்..

இதுதான் லாபம்..

இப்படிக் குறைந்த விலையில் போன்களை வாங்க மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

ப்யூச்சர் போன்களைப் பயன்படுத்தும் மக்கள் சில மாதங்களில் அல்லது வருடங்களில் இதே நெட்வொர்கில் ஸ்மார்ட்போனுக்கு மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தற்போது டெலிகாம் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை ஆர்வமுடன் கையில் எடுத்து.

 

 திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

இந்நிலையில் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது ப்யூச்சர் போன் திட்டத்தைக் கைவிட்டு நேரடியாக ஸ்மார்ட்போனையே 500 ரூபாய்க்குக் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது.

சராசரி வருவாய்

சராசரி வருவாய்

டெலிகாம் நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிகமானோருக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை வழங்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவு அதிகளவில் குறையும் என்ற பல சந்தை ஆலோசகர்கள் கருத்தை முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஸ்திரமான முடிவு..

ஸ்திரமான முடிவு..

சந்தை ஆலோசகர்களின் கருந்து சரியாக இருந்தாலும், டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் தற்போது நடக்கும் மிகப்பெரிய விலை போரில் வெற்றி பெற வேண்டும் என்பதிலும், ஜியோவின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதில் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் உறுதியாக இருக்கிறது.

ஜியோவிற்குப் பின்னடைவு

ஜியோவிற்குப் பின்னடைவு

ஜியோ ப்யூச்சர் போன் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில், பிற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய முடிவு செய்து வருகிறது.

இது கண்டிப்பாக ஜியோவிற்கு பின்னடைவாக அமையும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+