பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் லாபம் 64 சதவீதம் வரை உயர்ந்து 153.19 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
லாபம்
இதுவே சென்ற ஆண்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 93.54 கோடி ரூபாய் லாபத்தினைப் பிஎச்இஎல் பெற்று இருந்தது.
வருவாய்
சென்ற ஆண்டு 6,602.82 கோடி ரூபாயாக இருந்த வருவாய் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 0.4 சதவீதம் உயர்ந்து 6,626.35 கோடி ரூபாயாக உள்ளது.
பங்கு சந்தை
பிஎச்இஎல் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய பங்கு சந்தை நேர முடிவிற்குச் சில நிமிடங்கள் முன்பு 1.54 சதவீதம் என 1.45 புள்ளிகள் உயர்ந்து 95.40 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
பிஎச்இஎல்
பெல் என்று அழைக்கப்படும் பிஎச்இஎல் (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) நிறுவனமானது ஒரு பொதுத் துறை இந்திய நிறுவனமாகும். எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங் மற்றும் உற்பத்தி நிறுவனமான பிஎச்இஎல் 1964-ம் ஆண்டுத் துவங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமாகப் பிஎச்இஎல் உள்ளது.


Click it and Unblock the Notifications