இந்திய கார் சந்தையினை கூடுதலாக அடைய, எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய மற்றும் ஹைபிரிட் வாகன தொழில்னுபங்களை பயன்படுத்த என வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் அதாவது 20,000 கோடி ரூபாயினை இந்தியாவில் முதலீடு செய்ய சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டில் 2.3 பில்லியன் டாலரினை மாருதி நிறுவனத்தின் பங்குகளிலும், மீதம் உள்ள 0.7 பில்லியன் டாலரினை சுசூகி மோட்டார்ஸ் குஜராத்திலும் முதலீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டில் மாருதி சுசூகியின் பங்கு சந்தை மதிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வைப் பெற்றுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் மாருதி சுசூகி நிறுவனம் 2018 இறுதிக்குள் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் 6 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க வாய்ப்பில்லை என்றும் அரசு மானியம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications