யார் இந்த ‘பேட் மேன்’? உலகமே கொண்டாடும் தமிழர்..!

கோயமுத்தூர் மாவட்டத்தில் ஓரு சாதாரணக் கிராமத்தில் பிறந்து 9 வகுப்புடன் பள்ளிப்படிப்பில் இருந்து விலகி வெல்டிங் கடை வைத்து நடத்தி வந்த அருணாசலம் முருகானந்தம் உலகின் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆன பில்கேட்ஸ், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அலிபாபா நிறுவனர் ஜேக் மா வரை அனைவருடன் நட்புறவை கொண்டவர்.

அமெரிக்க டைம்ஸ் இதழின் உலகின் மிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் இவரும் ஒருவர் என்ற பெருமைக்கும் சொந்தக்கார. ஆனால் இந்த இடத்திற்கு இவரால் சாதாரணமாக வந்து சேர முடியவில்லை. பல அவமானங்கள், வலி என இவரது பாதை பூவாக இல்லாமல் கரடுமுரடாகத் தான் இருந்துள்ளது.

திருமணம்

திருமணம்

திருமணம் ஆன புதிதில் தனது மனைவி மாதவிடாய் காலத்தில் அழுக்கு துனி ஒன்றை மறைத்து எடுத்துக்கொண்டு சென்வதைக் கண்டு என்ன அது என்று கேட்டுள்ளார். பின்னர் ஏன் கடைகளின் விற்கப்படும் நேப்கினை வாங்கிப் பயன்படுத்தவில்லை என்று கேட்ட போது நம் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தத் துவங்கினால் நமது ஒரு மாத பாலுக்கான பட்ஜெட்டில் இடிக்கும் என்று கூறிச் சென்றுள்ளார்.

முதல் நேப்கின்

முதல் நேப்கின்

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகானந்தம் அடுத்த நாள் ஒரு நேப்கினை வாங்கித் தனது மனைவிக்கு அளித்தது மட்டும் இல்லாமல் அதில் என்ன தான் இருக்கின்றது என்று பார்த்துள்ளார். பஞ்சு மற்றும் பேப்பர் என்பதை அறிந்து தானே இதனைச் செய்தால் என்றால் என்ன முயற்சி எடுத்துள்ளார்.

தோல்வி

தோல்வி

ஆனால் இவர் செய்த நேப்கின் முதலில் தோல்வி அடைய அதனைத் தொடர்ந்து புதிய மாற்றங்கள் செய்யப் பல அவமானங்களைச் சந்தித்தது மட்டும் இல்லாமல் இவரது திருமண வாழ்க்கையிலும் முறிவு ஏற்பட்டது.

விடா முயற்சி

விடா முயற்சி

ஆனால் தொடர்ந்து விடா முயற்சியுடன் தனக்குத் தான் நேப்கினை வைத்துக் கோழி மற்றும் ஆட்டு இரத்தம் போன்றவற்றைப் பயன்படுத்திப் பல சோதனைகளைச் செய்து வெற்றிகண்டு அதற்கான காப்புரிமையும் ஐஐடி மெட்ராசில் பெற்றது மட்டும் இல்லாமல் தற்போது அதனை இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கொண்டு சென்றுகொண்டு இருக்கிறார்.

 வேலை வாய்ப்பும், பெண்கள் முன்னேற்றமும்

வேலை வாய்ப்பும், பெண்கள் முன்னேற்றமும்

ஆயிரம் கணக்கான பெண்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தினை லாபம் ஏதும் பார்க்காமல் குறைந்த விலைக்கு அளித்தது மட்டும் இல்லாமல் பல்லாயிரம் பேருக்கான வேலை வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளார்.

 இயந்திரம்

இயந்திரம்

இவர் கண்டுபிடித்துள்ள இயந்திரங்களும் எளிமையான இரும்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு தான் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

விலை

விலை

சர்வதேச அளவில் இவரைத் தேடி வந்து சந்தித்து இவரது வாழ்க்கையினைக் குறும்படமாக எடுத்துச் செல்கின்றனர். இவரது இயந்திரங்களை 40,000 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை பல்வேறு விதமான விலையில் தொழில் துவங்க விருப்பம் உள்ளவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு அளித்து வருகிறார்.

நிறுவனம்

நிறுவனம்

கோயம்புத்தூரில் ஜெயஸ்ரீரீ இண்டஸ்ட்ரீஸ் நேப்கின் நிறுவனத்தினை நிறுவி நடத்தி வரும் இவர் குஜராத், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் தனது புதிய ஆலைகளைத் துவங்கும் எண்ணத்தில் உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் சிங்கப்பூரிலும் அமைக்க உள்ளார்.

வளர்ச்சி

வளர்ச்சி

இன்னும் இரண்டு ஆண்டில் 1,000 கோடி மதிப்பிலான நிறுவனமாக இதனை மாற்றுவது மட்டும் இல்லாமல் 100 சதவீத உடலுக்குக் கேடு விளைவிக்காத நேப்கினை 100 சதவீத இந்திய பெண்களையும் பயன்படுத்த வைப்பதே தனது லட்சியம் என்றும் செயல்பட்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+