இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் டிஜிட்டல் சேவை சார்ந்த வர்த்தகத்திற்கு மாறிவரும் நிலையில் 2017ஆம் ஆண்டில் காக்னிசென்ட் சுமார் 10 சதவீத அதிக வருவாயைப் பெற்று வருகிறது. இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 200 பேர் குறைந்துள்ளனர்.
ஐடி நிறுவனங்கள்
பொதுவாக ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களது வருவாயும் அதிகரிக்கும். ஆனால் வரலாற்றில் முதல் முறையாகக் காக்னிசென்ட் நிறுவனம் ஊழியர்கள் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் குறைந்தும் வருவாய் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
வருவாய்
ஊழியர்களை நம்பி இயங்கிய தொழிற்சாலையில் இருந்து தொழில்நுட்ப சேவைக்கு மாறும் போது பொதுவாகவே ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து வருவாய் அதிகரிக்கும்.
இதேபோல் வர்த்தகத்தை இயக்கக் குறைவான ஊழியர்களே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
காக்னிசென்ட்
இதேபோலத்தான் தற்போது காக்னிசென்ட் நிறுவனம் டிஜிட்டல் சேவை பிரிவிற்கு அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி, புதிய வர்த்தகத்தை ஈர்த்து வருகிறது.
இதன் எதிரொலியாகவே தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில், வர்த்தகம் மற்றும் வருவாய் அளவுகள் அதிகரித்து வருகிறது.
ஊழியர்கள் எண்ணிக்கை
2017ஆம் ஆண்டில் முடிவில் காக்னிசென்ட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,60,000 ஆக உள்ளது.
பிற நிறுவனங்கள்
காக்னிசென்ட் நிறுவனத்தைப் போல இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனத்திலும் இந்த வருடம் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் மற்றும் லாப முடிவுகள் ஏப்ரல் மாதம் தான் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications