12வருடத்தில் முதல் முறையாக லாபம்.. டிவிட்டருக்கு அடித்தது யோகம்..!
சமுக வலைத்தள உலகில் பேஸ்புக்கிற்கு அடுத்த இருப்பது டிவிட்டர் தான், ஆனால் கடந்த 12 வருடமாக 4வது காலாண்டில் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வந்த நிலையில் முதல் முறையாக 91 மில்லியன் டாலர் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
டிசம்பர் 31 உடன் கலாண்டில் டிவிட்டர் நிறுவனம் 732 மில்லியன் டாலர் அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது, இது கடந்த வருடத்தை விட 2 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 91 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இக்காலாண்டில் டிவிட்டர் நிறுவனத்தின் வருவாய் 686 மில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியான நிலையில், கணிப்புகளைத் தாண்டி வருவாய் பெற்றுள்ளது.
இக்காலாண்டில் டிவிட்டர் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் வெறும் 330 மில்லியனாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications