இரண்டு இந்தியர்கள் உருவாக்கிய பிட்காயின் பற்றி தெரியுமா.. 1000 பேர் முதலீடு செய்துள்ளனர்..!

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பிட்காயினின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து வந்து பின்னர் 2018-ம் ஆண்டுச் சரிவையும் சந்தித்து வருகிறது. பிட்காடின் பொன்ற கரன்சிகளில் முதலீடு செய்வது சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்றும் மத்திய அரசு விரைவில் லட்சுமி காயின் என்ற ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்ஸி வெளியிடப்படும் செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

ஆனால் இந்தியாவில் இருந்து இரண்டு இளைஞர்கள் பிட்காயின் போன்ற ஒரு கிரிப்டோகரன்சியை உருவாக்கி விற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது

கைது

அன்மையில் சைபர் செல் இரண்டு இந்தியர்கள் கிரிப்டோ கரன்சியினை விற்று வருவதாகக் கைத்துச் செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் போது அவர்கள் ரஷ்யாவின் பிரதான பெட்ரோலிய நிறுவனமான ரோஸ் நேபிட் உடன் தொடர்பு உள்ளவர்கள் என்று பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது.

முதலீடு

முதலீடு

ஆஷிஷ் மாலிக் மற்றும் சந்தீப் கவுஷிக் என்ற இருவரும் இந்தியாவில் பிட்காயின் போன்ற கரன்சியினை அறிமுகம் செய்ய வேண்டும் என்று ரஷியா, தாய்லாந்து துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பெற்றுள்ளனர்.

வட்டி விகித லாபம்

வட்டி விகித லாபம்

முதலீட்டார்களைப் பல ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகளில் சந்தித்து 8 முதல் 17 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும் என்று 1,000 நபர்கள் வரை முதலீடும் செய்ய வைத்தது மட்டும் இல்லாமல் கோடி கணக்கில் பணமும் சம்பாதித்துள்ளனர்.

 இந்திய பிரபலங்கள்

இந்திய பிரபலங்கள்

முதலீடுகளைத் திரட்டுவதற்காக இவர்கள் நடத்திய கருத்தரங்கில் பல இந்திய பிரபலங்களும் பங்கேற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஏசிபி சஞ்சீவ் தியாகி மேற்பார்வையின் கீழ் இன்ஸ்பெக்டர் சந்தீப் மல்ஹோத்ரா தலைமையிலான குழு இந்த வழக்கில் நான்கு மாதங்களுக்கும் மேலாக விசாரணை செய்து வந்துள்ளது.

விசாரணை

விசாரணை

வினோத் குமார் என்ற முதலீட்டாளரிடம் விசாரித்துப் போது இவர் 7,50,000 ரூபாய் முதலீடு செய்துள்ளதும், ஆஷிஷ் மாலிக் மற்றும் சந்தீப் கவுஷிக் இருவரும் ரோஸ் நேபிட் ஹெட்ஜ் ஃபண்டு நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு வழக்கில் ரவிந்தர் பால் என்பவர் இவர்களிடம் 27 பிட்காயின் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பணம் மற்றும் செக்கு

பணம் மற்றும் செக்கு

பல முதலீட்டாளர்கள் ரொக்க பணமாகவும், செக்குகளாகவும் முதலீடுகளைச் செய்துள்ளனர். முதலில் ரோஸ் நேபிட் ஹெட்ஜ் ஃபண்டு என்று துவங்கப்பட்ட காயினானது பின்னர் ஆர்எச்எப் காயின் என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.

 ஆர்எச்எப் காயின்

ஆர்எச்எப் காயின்

ஆர்எச்எப் காயின் துவக்கத்தில் 3.50 ரூபாய் ஒரு காயின் என்று விற்பனை செய்துள்ளனர். பிட்காயின் மதிப்பு அன்மையில் சரிந்த பிறகே இவர்கள் ஆர்எச்எப் காயின் என்பதை அறிமுகம் செய்துள்ளார்கள். இதற்கு எந்த மதிப்பும் கிடையாது என்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+