சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் வரலாறு படைத்த இந்திரா நூயி..!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயிவை ஐசிசி-ன் முதல் சுதந்திரமான பெண் இயக்குனராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.
ஐசிசி போர்டில் 2018 ஜூன் மாதம் இந்திரா சேருவார் என்றும் இன்றைய கூட்டத்தில் தனது நியமனத்தை ஒருமனதாக உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்திராவின் கீழ் 22 பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 1 பில்லியனுக்கு அதிகமான வருவாயினை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் இல்லாமல் பார்ச்யூன் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திரா நூயியும் ஒருவர் ஆவார்.


Click it and Unblock the Notifications