சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7 வாரம் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளதால் இந்தியாவில் மூன்று நாட்களுக்காகப் பெட்ரொல் மற்றும் டீசல் மீதான விலை உயரவில்லை.
சனிக்கிழமை நிலவரத்தின் படி பிரெண்ட் கச்சா எண்ணெய் வெள்ளிக்கிழமையினை விடப் பேரலுக்கு 3.22 சதவீதம் என 2.02 டாலர்கள் சரிந்து 62.79 டாலர் ஒரு பேரல் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் WTI கச்சா எண்ணெய்யானது 3.29 சதவீதம் என 1.95 டாலர்கள் சரிந்து 59.20 டாலர்களாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 0.03 பைசா குறைந்து 76.08 ரூபாய் என்றும், டீசல் 0.04 பைசா குறைந்து 67.62 லிட்டர் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய பெட்ரோலிய துறை
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் இனி பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால அது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கைகளில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியினை மத்திய அரசு குறைத்து இருந்தாலும் சாலை மற்றும் கட்டுமான கலால் வரியினை உயர்த்தியதால் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முன்பு மத்திய அரசு மாநில அரசுகளிடம் வாட் வரியினைக் குறைக்குமாறு கோரிக்கை வைத்தது.
சுங்க வரிக் குறைப்பு
சென்ற அக்டோபர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியினை 2 ரூபாய் வரை மத்திய அரசு குறைத்தது. இதனால் சற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்தும் இருந்தது.
பாஜக மாநிலங்கள்
பாஜக மாநிலங்களான மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் போன்றவற்றில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்ட நிலையில் தமிழ் நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறைப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
தர்மேந்தரப் பிரதான்
செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அரசின் கீழ் வரும் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியினைக் குறைத்தால் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்தார்.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications