இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி இல்லாமல் விடுமுறை எடுக்கும் ஊழியர்களுக்குக் கடிவாளம் போடும் விதமாக அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், நேர்மையான மற்றும் ஊக்கமான மன உறுதியை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாகவே ஊழியர்களின் பணி நீக்கம் நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
ஊழியர்கள் பட்டியல்
இந்திய ரயில்வேஸ் 13,000-க்கும் அதிகமான அனுமதி இல்லாமல் நீண்ட நாட்கள் மற்றும் அதிக விடுமுறை எடுக்கும் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களைப் பணி நீக்கம் செய்ய இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
செயல் திறன்
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான ரயில்வேயில் 13 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இருக்கின்றனர். இதில் 13,000-க்கும் அதிகமான ஊழியர்கள் அதிக விடுமுறை மற்றும் நீண்ட நாட்களுக்குத் தொடர் விடுமுறையினை அனுமதி இல்லாமல் எடுப்பது மீதம் உள்ள ஊழியர்களின் செயல் திறனைக் குறைகின்றது என்றும் ரயில்வே நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உறுதி
எனவே இதுபோன்ற ஊழியர்களை முறையான விதிமுறைகளின் கீழ் பணி நீக்கம் செய்ய இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதியும் செய்துள்ளது.
சுற்றறிக்கை
ரயில்வே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது மட்டும் இல்லாமல் அனைத்து அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலமாக ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications