ஏடிஎம் மையங்களில் ஆதார் சரிபார்ப்பு மூலமாகப் பண பரிமாற்றம்.. இத்துவாவது பாதுகாப்பாக இருக்குமா?

ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டு பயன்படுத்திப் பணம் எடுக்கும் போது 4 இலக்குக் குறியீட்டை அளித்துத் தற்போது பரிவர்த்தனை செய்து வருகிறோம். விரைவில் இது ஆதார் பையோமெட்ரிக் விவரங்கள் மூலமாகச் சரிபார்த்துப் பணத்தினை விநியோகிக்கும் முறையினைச் சோதனை செய்து வருகின்றனர்.

இது சாத்தியமான நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானதாக மாறும் என்று கூறப்படுகிறது.

ஏடிஎம் மையங்கள்

ஏடிஎம் மையங்கள்

இந்திய வங்கிகள் மட்டும் இல்லாமல் பல வெளிநாட்டு வங்கிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருவதை அடுத்து தங்களது ஏடிஎம் மையங்களைக் குறைத்துக்கொண்டு வரும் அதே நேரத்தில் பாதுகாப்பான சேவையினை எப்படி அளிப்பது என்பதற்கான ஆய்வுகளை நடைபெற்று தான் வருகின்றன.

வைரஸ் மற்றும் பண மதிப்பு நீக்கம்

வைரஸ் மற்றும் பண மதிப்பு நீக்கம்

ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல், பண மதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கையினை அடுத்து இந்திய வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் கணினிகளை மாற்றி அமைத்து வரும் அதே நேரத்தில் ஆதார் போன்ற புதிய தொழில்நுட்பத்தினைப் புகுத்தும்படியான இயந்திரங்களை நிறுவி வருகின்றனர்.

 ஆதார் சரிபார்ப்பு

ஆதார் சரிபார்ப்பு

இதன் அடுத்தகட்டமாக ஏடிஎம் இயந்திரங்களில் ஆதார் சரிபார்ப்பு முறை முழுமையாக அறிமுகம் செய்யும் போது ஒருவருடை கார்டு மற்றும் பின் எண்ணை வைத்துக்கொண்டு மட்டும் பணத்தினை வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாது. கைவிரல் ரேகை போன்றவை தேவைப்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏடிஎம் கார்டு பின் எண்

ஏடிஎம் கார்டு பின் எண்

அதே நேரம் பின் என் மறந்து விட்டது என்பதராக மீண்டும் எண்ணிற்கு விண்ணப்பிப்பது போன்ற சிக்கல்களும் குறையும் அதே நேரத்தில் முதியவர்கள்க்குக் கைரேகை போன்றவை சரியாக இருக்காது என்பதால் அவர்களுக்கு உள்ள விலக்குள் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுகின்றது.

டேப்ளட் கணினிகள்

டேப்ளட் கணினிகள்

ஆதார் சரிபார்ப்பு முறை அறிமுகம் செய்யப்படும் போது டேப்ளட் கணினிகள் மூலம் இயங்கும் ஏடிஎம் மையங்களாக மாற்றப்படும் என்றும் ஏடிஎம் தொழில்னுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

இப்படி நடந்தால் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள் அதிகளவில் பயனபாட்டிற்கு வரவும் வாய்ப்புகள் உள்ளன.

ஏடிஎம் பரிவர்த்தனைகள்

ஏடிஎம் பரிவர்த்தனைகள்

டிஜிட்டல் பரிவர்த்தனையினை மத்திய அரசு அதிகளவில் ஊக்குவித்து வரும் அதே நேரத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு 2016 அக்டோபர் மாதம் 4.1 லட்சம் பரிவர்த்தனைகள் தினமும் நடைபெற்று வந்தது என்றும், அது மீண்டும் அதிகரித்துத் தற்பீது 2017 டிசம்பர் மாதம் 4.2 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+