சமுக வலைத்தளங்களில் பிறர் மனது புண்படும் படி வெளியாகும் தகவல்களைக் கட்டுப்படுத்தும் படி டெக் நிறுவனங்கள் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
விடியோ இணையதளமான யூடியூப் பிறர் மனதை புண்படுத்தாத படி தங்களது தளத்தில் விடியோக்களைப் பயனர்கள் பதிவேற்ற வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
யூடியூப்
இந்தக் கட்டுரையினைப் படிக்கும் பலருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. யூடியூபில் விடியோக்களை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்றும். அப்படிப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பிறர் விடியோவை நாம் பதிவேற்ற செய்யக் கூடாது. அது பயனருடைய அசல் விடியோக இருக்க வேண்டும்.
புதிய விதி
ஒரு விடியோ படைப்பாளி பதிவேற்றும் விடியோவானது ஏதாவது ஒரு கொடூரமான தன்மையைக் கொண்டிருக்கும்போது, மக்கள் அதிர்ச்சி அடைந்தாலும், வன்முறை அல்லது வெறுப்பை ஊக்குவிக்கிறது, கொடூரத்தை வெளிப்படுத்துகிறது, காட்சிகள் அல்லது சந்தாதார்களைப் பெற முயற்சிக்கும் மற்றவர்களின் வலியை உணராதது போன்ற புகார்கள் எழும் வீடியோக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
என்ன நடவடிக்கை?
யூடியூப் விடியோ மீது மேலே கூறியது போன்ற புகார் எழும் போது விளம்பரங்கள் நீக்கப்படும். ஆட்சென்ஸ் கணக்குப் பயன்படுத்த தடை செய்யப்படும் அல்லது அதன் இலக்குக் குறைக்கப்படும் அல்லது வருவாய் குறைக்கப்படு, வீடியோ நீக்கப்படும் போன்ற கடுமையான விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
வீடியோ பரிந்துரைகள்
விடியோ பரிந்துரைகளில் இருந்து இதுபோன்ற விடியோக்கள் நீக்கப்படும். வைரலில் இருந்து தடுக்கப்படும். டிரெண்டில் இருந்து நீக்கப்படும்.
பிற தளங்களும்
யுடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளங்களும் இதுப்போன்று பிறர் மனதை புண்படும் படியாக வெளியாகும் பதிவுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி விதிகளை மாற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications