"நீர் இன்றி அமையாது உலகு" என்பதைப் போல இன்றைய வாழ்க்கை முறையில் கார்ப்ரேட் நிறுவனங்கள் இன்றி நம்மால் வாழ முடியாது. நாம் தினமும் பயன்படுத்தும் பல பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கார்ப்ரேட் தயாரிப்புகள் தான் என நாம் உணர வேண்டும்.
இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட நாடுகளுக்குத் தற்போது வெளிநாட்டு நுகர்வோர் நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. இந்த முதலீடுகள் நேரடியாகவோ அல்லது வெளிநாட்டில் முதன்மையாக இருக்கும் நிறுவனத்தில் அதிகளவிலான முதலீடு செய்து வர்த்தகத்தைப் பெறவோ கார்ப்ரேட் நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது.
இத்தகைய கார்ப்ரேட் நிறுவனங்களின் மிகப்பெரிய வர்த்தக ஆயுதம் என்றால் விளம்பரம் தான். கிரியேடிவாகாவும், ஈர்க்கக்கூடிய விளம்பரங்களை உருவாக்கி மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பதில் மிகவும் கவனமாகச் செயல்படுகிறது.
இத்தகைய விளம்பரங்கள் கார்ப்ரேட் நிறுவனத்தில் மட்டும்தான் உள்ளதா என்றால், நிச்சயமாக இல்லை அனைத்துத் துறைகளிலும் உள்ளது. தற்போது அரசு திட்டங்கள் கூடப் பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இப்படி நம்முடைய வாழ்க்கை முறையை முழுவதுமாக ஆட்கொண்டு இருக்கும் டாப் கார்ப்ரேட் நிறுவனங்களைப் பற்றிப் பார்ப்போம்.
1.நெஸ்லே (உணவு பிரிவு)
சுவிஸ் நாட்டை மையமாகக் கொண்டது நெஸ்லே நிறுவனம். மொத்தம் 80 வகை உணவுப் பொருட்களைத் தயாரிக்கிறது. அதில் சில முக்கியமானவை மேகி, கிட்கேட், மைலோ, நெஸ்கபே. இந்தக் கம்பெனியில் மொத்தம் 487 தயாரிப்பு நிலையங்கள் உள்ளன, அதில் 3.5 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள்.
ஒரு வருடத்திற்கு இந்த நிறுவனத்தின் வருமானம் சுமார் 90 பில்லியன் டாலர். இது போக லோரியல், தி பாடி ஷொப் என அழகு சாதன பொருட்களும் இந்த நிறுவன வசம் தான்.
2. குவாண்டா டெக்னாலஜிஸ்
தைவான் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் தான் ஆப்பிள், சாம்சங், டெல், எச்பி என அனைத்து முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கும் சிப் முதல் அனைத்து உதிரிப்பாகங்களையும் தயார் செய்து கொடுக்கிறது. இதன் மூலம் டெக்னாலஜி துறையை இந்த நிறுவனம் எளிதாக ஆள்கிறது. இப்படி ஒரு நிறுவனம் இருப்பதே பலருக்கும் தெரியாது என்பது தான் உண்மை.
3. யூனிலீவர்
காலை பேஸ்ட் முதல் இரவு கொசுவர்த்தி வரை நாம் பயன்படுத்தும் பொருட்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. மொத்தம் 400 பிராண்டுகளைக் கொண்டுள்ளது. நாம் தினமும் உபயோகிக்கும் கோல்கேட், ஹமாம், ரின், ஹார்லிக்ஸ், டவ், சர்ப் எனப் பலதும் யூனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பு.
இது ஒரு பிரிட்டன் நாட்டு நிறுவனம்.190 நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கிவருகிறது.ஆண்டு வருமானம் 63 பில்லியன் டாலர்கள்.இவர்கள் எந்தப் பொருளையும் தயாரிப்பதில்லை வெறும் மார்க்கெட்டிங் மட்டும் தான்.
4.லாக்ஹீட் மார்ட்டின்
இது ஒரு ஆயுத உற்பத்தி நிறுவனம். உலகத்தில் உலா அனைத்து நாடுகளுக்கும் ஆயுதம் தயாரித்துக் கொடுக்கிறது. அமெரிக்காவில் இருந்து மட்டும் வருடத்திற்கு 20-25 லட்சம் கோடி இந்த நிறுவனத்திற்கு நிதி அளிக்கப்படுகிறது.
அப்போது பிற அனைத்து நாடுகளிலும் இருந்து எவளவு கிடைக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்தியாவுக்கும் இந்த நிறுவனம் தான் ஆயுதம் அளிக்கிறது.
5.இன் பேவ்
இது ஒரு மது உற்பத்தி செய்யும் நிறுவனம். உலகத்தில் உள்ள 46% பீர்களை இன் பேவ் தான் உற்பத்தி செய்கிறது. பிரபலமாக இருக்கும் பட்வெய்சர், கொரோனா ஆகிய பீர்களை இந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது தான்.
6.pfizer
உலகில் விற்கப்படும் ஐந்தில்-இல் ஒரு மாத்திரை pfizerஇக்கு சொந்தமானது தான். அண்டிபயோட்டிக்ஸ், ட்ரக்ஸ், மருந்துகள் என அனைத்திலும் இவர்கள் சுமார் 150 நாடுகளில் இந்நிறுவனம் வர்த்தகம் பரவியுள்ளது. அரசு மற்றும் தனியார் என அனைத்து மருத்துவமனைகளையும் இவர்கள் தாக்கம் பெரிய அளவில் இருக்கிறது.
7. வால்ட் டிஸ்னி
உலகத்தில் உள்ள முக்கால்வாசி ஊடகங்களையும் இந்த வால்ட் டிஸ்னி கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நாம் டிஸ்னி என்றால் வெறும் கார்ட்டூன் என்று தான் நினைத்திருப்போம், ஆனால் இவர்கள் செய்தி, நாளிதழ்கள் எனப் பலதையும் இவர்கள் வசம் வைத்துள்ளனர். தீம் பார்க் மற்றும் திரைப்படத் தயாரிப்பு இவர்களுடைய முக்கியமா ஒரு வர்த்தகம். 20th century fox என்னும் தயாரிப்பு நிறுவனமும் இவர்கள் கையில் தான்.
8.ஆப்பிள்
டெக் உலகை அடக்கியாளும் முக்கியமான நிறுவனங்களில் ஆப்பிள் முதன்மையானது. இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 800 பில்லியன் டாலர். இது வரை ஏற குறைய ஒரு கோடி ஐபோன் விற்றுள்ளது. அது போக மேக், ஐபாட் எனப் பல டெக்னாலஜி சாதனங்களை விற்று வருகிறது. இந்த நிறுவன தயாரிப்புகளை வைத்திருப்பதே ஒரு பெருமையாக மக்கள் கருதுவதே இந்த ஆப்பிள் நிறுவன வெற்றிக்குக் காரணம்.
9.அல்பபெட்
கூகிள் இன் தாய் நிறுவனம் தான் இந்த அல்பபெட் .நாம் இன்று இணையம் என்று சொன்னாலே கூகிள் தான் நினைவுக்கு வரும் அந்த அளவுக்கு அது நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இணையம் மற்றும் அல்லாமல் போன்களிலும் இவர்கள் ஆதிக்கம் மிக அதிகம்.
யூடியூப், ஜிமெயில், ஆண்ட்ராய்டு எனப் பல சேவைகள் இந்நிறுவனத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் தளமாக உள்ளது.


Click it and Unblock the Notifications