2017-18ஆம் நிதியாண்டில் மத்திய அரசு நேரடி வரி வசூல் அளவு 10.05 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் - ஜனவரி வரையிலான 9 மாத காலகட்டத்தில் மத்திய அரசு நேரடி வரியாக 6.95 லட்சம் ரூபாய் வரியை வசூல் செய்து அசத்தியுள்ளது. இந்த வரி வசூல் மூலம் சுமார் 69.2 சதவீத இலக்கை மத்திய அரசு அடைந்துள்ளது.
வளர்ச்சி
இந்த 9 மாத காலத்தில் வசூல் செய்யப்பட்ட 6.95 லட்சம் கோடி ரூபாயைக் கடந்த வருட வசூலை ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டில் சுமார் 19.3 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
கார்ப்ரேட் வரி
இக்காலகட்டத்தில் கார்ப்ரேட் வரி வசூல் 19.2 சதவீதமும், தனிநபர் வருமான வரி வசூல் 18.6 சதவீதம் வரையில் உயர்வடைந்துள்ளது.
மொத்த வரி வசூல்
ஏப்ரல் 2017- ஜனவரி 2018 வரையிலான காலத்தில் மத்திய வருவாய் வரித் துறை சுமார் 8.21 லட்சம் கோடி ரூபாய் வரையிலான வரி வசூலித்துள்ளது, இதில் 1.26 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் திரும்ப அளிக்க வேண்டி தொகையாக உள்ளது.
இதன் மூலம் மொத்த வரி வசூலிலும் 13.3 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications