உலகின் மிகப்பெரிய ரயில்வே தடத்தைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதன்மையாக இருப்பது, நாம் அனைவருக்கும் பெருமையான விஷயமாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முக்கியப் போக்குவரத்தாக மட்டும் அல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெழும்பாகவும் இருந்தது இந்திய ரயில்வே துறை.
இத்துறையை முழுமையாக மாற்றியமைக்கவும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக அதிகவேக புல்லட் ரயில் திட்டத்தைத் துவங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்தி வருத்தத்தை அளிக்கிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
3 வருடம்
இந்திய ரயில்வே துறையில் கடந்த 3 வருடத்தில் மட்டும் சுமார் 18,500க்கும் அதிகமானோர் மீது ஊழல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு, உள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வழக்குகள்
2015-2017ஆம் நிதியாண்டுகளில் வடக்கு ரயில்வே துறையில் மிகவும் அதிகமாக 6,121 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2வது இடத்தில் தெற்கு ரயில்வே துறையில் 1,955 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசிக் காலகட்டம்
இதில் அதிகப்படியான ஊழியர்கள், தங்களது பணியின் கடைசிக் காலத்தில் இருக்கும்போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இப்படிக் கடைசிப் பணிக்காலத்தில் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சேவை மற்றும் பென்ஷன் நன்மைகள் தடைப்படும்.
சில வழக்குகள்
ஓய்வுபெறும் ரயில்வே ஊழியர்களுக்குப் பேர்வெல் பார்ட்டி அரசு செலவில் கொடுக்கப்படும். இப்படி இந்த ஊழியருக்கு பார்ட்டி கொடுக்க ரயில்வே கணக்கில் பணம் போட்ட பின்பு கூடச் சிலரின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது எனத் தகவல்கள் கிடைத்துள்ளது.
மத்திய புலனாய்வு ஆணையம்
இந்தக் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யும் மத்திய புலனாய்வு ஆணையம் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 2016ஆம் ஆண்டில் மட்டும் ரயில்வே ஊழியர்களுக்கு எதிராகச் சுமார் 11,200 பேர் மீது புகார் வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications