தொழிற்துறை உற்பத்தியின் வளர்ச்சி 7.1 சதவீதமாகக் குறைந்தது..!
இந்திய தொழிற்சாலை உற்பத்தி அளவு நவம்பர் மாதத்தில் 8.4 சதவீதம் என்ற 25 மாத உயர்வைத் தொட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் இதன் வளர்ச்சி 7.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தொழிற்சாலை உற்பத்தி, தொழிற்துறை உற்பத்தி குறியீடுக்கு நிகரானது. இதன் வளர்ச்சி நாட்டின் வர்த்தக வளர்ச்சியை எடுத்துக்காட்டக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலை உற்பத்தி அளவில் 4கில் 3 பகுதி உற்பத்தித் துறையைச் சார்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் உற்பத்தி துறை 10.2 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்த நிலையில் டிசம்பர் மாதம் 8.4 சதவீதம் மட்டும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் வாயிலாகவே டிசம்பர் மாத தொழிற்துறை உற்பத்தி 7.1 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications