ஜாலியான வேலை.. ஏகப்பட்ட சம்பளம்.. உண்மையில் இதுதான் சொர்க்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம ஊர்ல இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம். பக்கோடா போடுவதும் கூட வேலைதானே எனச் சொல்பவர்களும் உண்டு.

ஆனால் உலகில் உள்ள சில வினோதமான வேலைகளும் அவற்றின் சம்பளத்தையும் கேட்டா ஆடிப்போயிருவீங்க..

ப்ரொபெஷனல் ஸ்னக்லர் (Professional Sngleugr)
 

ப்ரொபெஷனல் ஸ்னக்லர் (Professional Sngleugr)

சந்தேகமே வேண்டாம். நம்ம ஊரு கட்டிப்பிடி வைத்தியமே தான். நாம கவலையாக இருக்கும் போது யாராவது நம்மை அரவணைத்து ஆறுதலாக இருந்தால் எப்படி இருக்கும். தொழில்முறை அரவணைப்பாளர்கள் இதற்குப் பெறும் சம்பளம் 60 டாலர்கள் (சுமார் 4000 ரூபாய்) ஒரு மணி நேரத்திற்கு.

ஃப்ளேவரிஸ்ட் (Flavourist)

ஃப்ளேவரிஸ்ட் (Flavourist)

நம் உணவில் சுவையூட்ட பயன்படும் சுவையூட்டிகளைத் தயாரிக்கும் வேதியியல் வல்லுநர்கள் இவர்கள். உணவிற்குச் சுவை தரும் அதே சமயம் உடல்நலனுக்குத் தீங்கு செய்யாதவற்றைத் தயாரிக்கும் இவர்களுக்கு ஆண்டுக்கு 80000 டாலர்கள் சம்பளம் (51 லட்சம் )

 ஸ்வீட் டேஸ்டர் (Sweet Taster)

ஸ்வீட் டேஸ்டர் (Sweet Taster)

நம்மூரில் " கரும்பு தின்ன கூலியா? " எனக் கேட்பார்களே! அதே வேலை தான். தமது நிறுவனத்தின் தயாரிப்புகளைச் சோதிப்பது தான். போட்டி நிறுவனங்களின் தயாரிப்பையும் சுவை பார்த்து சொல்லும் இவர்களின் சம்பளம் ஆண்டுக்கு 31100 டாலர்கள் (20 லட்சம்!)

வீடியோ கேம் டெஸ்டர் (Video Game tester)
 

வீடியோ கேம் டெஸ்டர் (Video Game tester)

சின்ன வயசுல படிக்காம எப்ப பார்த்தாலும் வீடியோ கேமே விளையாடி செமையா அடி வாங்கிருக்கீங்களா? ஆனா இவர்கள் வேலையே இதுதான். தயாரிப்பு நிறுவனம் கேமை வெளியிடும் முன் அதன் குறைகளைக் கண்டறியும் இவர்களுக்கு 58000 டாலர் சம்பளம் (37லட்சம்)

லீகோ ஆர்டிஸ்ட் (LEGO certified professional artist/sculptor)

லீகோ ஆர்டிஸ்ட் (LEGO certified professional artist/sculptor)

நம்ம பக்கத்து வீட்டு குழந்தை வீடு கட்டி விளையாடுமே ! பில்டிங் பிளாக்ஸ் அதே தான். நிறைய விழாக்களுக்கு விதவிதமான வடிவமைப்புகள் செய்து தரும் இவர்களுக்கு ஊதியம் 37500 டாலர் (24 லட்சம்)

ஹோட்டல் ரிவியூவர் (Hotel Reviewer)

ஹோட்டல் ரிவியூவர் (Hotel Reviewer)

சுற்றுலா நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவையை வழங்க வேண்டுமே! உலகம் முழுதும் உள்ள தங்கும் விடுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து ரேட்டிங் கொடுக்கச் சம்பளம் 48000 டாலர் (30 லட்சம்)

ப்ரொபெஷனல் டிராவலர் (Professional Traveller)

ப்ரொபெஷனல் டிராவலர் (Professional Traveller)

சும்மா ஊர் சுத்த சம்பளம் 53000 டாலர் (34 லட்சம்) ! உலகம் முழுக்கப் பயணம் செய்து பல்வேறு கவர்ச்சியான இடங்களை ரிவியூ செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் தொழில்முறை பயணிகள் இவர்கள்.

ஃப்லிம் கிரிடிக் (Film Critic)

ஃப்லிம் கிரிடிக் (Film Critic)

நம்ம ஃப்ளூ சட்டை அண்ணன் மாதிரி படங்களை விமர்சனம் பண்ணுபவர்கள் தான். புதுத் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் இவர்களுக்கு 82000 டாலர் சம்பளமாம் (53 லட்சம் ) வெளிநாடுகளில் இவர்கள் ஹாலிவுட் நட்சத்திரங்களைப் பேட்டி எடுக்கும் வாய்ப்புகள் வருதாம். நம்ம ஊர்ல ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடம் இவர்கள் படும்பாடு இருக்கே!

பீர் டேஸ்டர் (Beer Taster)

பீர் டேஸ்டர் (Beer Taster)

எந்த வேலையாக இருந்தாலும் தண்ணி!அடிச்சுட்டு வரக்கூடாது என்பது தான் முதல் கண்டிஷன். இங்குத் தண்ணி அடிப்பதுதான் வேலையே. விதவிதமான பியர்களைக் குடித்து அதன் தரத்தை சொல்லவேண்டும். இதற்குச் சம்பளம் 45000 டாலர் (30லட்சம்)

குரூஸ் ஷிப் எண்டர்டெய்னர் (Cruise Ship entertainer)

குரூஸ் ஷிப் எண்டர்டெய்னர் (Cruise Ship entertainer)

மாசம் 3 லட்சம் சம்பளத்தோடு கப்பல்ல வேலை ! நடுகடல்ல கப்பல் நின்றால் இறங்கித் தள்ளும் வேலை இல்லை. பயணிகளின் பொழுதுபோகச் செய்யும் வேலை!

மணற்சிற்பம் செய்பவர் (Sand castle builder)

மணற்சிற்பம் செய்பவர் (Sand castle builder)

சின்ன வயசுல மணல் வீடு கட்டுனதக் கொஞ்சும் பெருச செஞ்சா 65000 டாலர் (41லட்சம்). ஆனால் மணல் சிற்பங்கள் செய்யப் பொறுமையும் கலைநயமும் மிக அவசியம்.

 கோல்ஃப் ஃபால் டைவர் (Golf Ball diver)

கோல்ஃப் ஃபால் டைவர் (Golf Ball diver)

என்றாவது நாம் அடித்துத் தண்ணீருக்குள் சென்ற கோல்ஃப் பந்து என்னானது என நினைத்ததுண்டா? அதைச் சேகரிப்பவரின் ஊதியம் 33000 டாலர்(21லட்சம்). தினமும் சராசரியாக 4000 பந்துகளைச் சேகரிப்பார்களாம்.

செலிபிரிடி பார்டி பிளேனர் (Celebrity party planner)

செலிபிரிடி பார்டி பிளேனர் (Celebrity party planner)

நம் வீட்டு விஷேசங்களைச் சிறப்பாக நடத்தி முடித்துத் தரும் விழா ஏற்பாட்டாளர்கள் வாங்கும் சம்பளம் 68000 டாலர் (44லட்சம்)

கடற்கன்னிகள் ( Mermaid)

கடற்கன்னிகள் ( Mermaid)

என்ன கடற்கன்னிகள் இருக்காங்களா? இருந்தாலும் அவர்களுக்கு யார் சம்பளம் தருவர் எனக் குழம்ப வேண்டாம். உடனே போய் நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள். கடற்கன்னி வேடம் போட்டு மாடலாக நடிக்கச் சம்பளம் 62000 டாலர் (40லட்சம்)

உலகத்திலேயே சிறந்த வேலை எது தெரியுமா?

உலகத்திலேயே சிறந்த வேலை எது தெரியுமா?

17000 பேருடன் போட்டி போட்டு, ஸ்ரூல் அமோர் என்பவர் ' உலகின் சிறந்த வேலை'யைப் பெற்றார். 40000 டாலர்(25லட்சம்) சம்பளத்தோடு 3 மாதங்கள் உலகின் 12 ஆடம்பர இடங்களுக்குச் சென்று தங்கும் வேலை. ஆயினும் கோடி ரூபாய் சம்பளம் என்றாலும் நம் மனதுக்குப் பிடித்த வேலை தானே சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The world's most incredible jobs and what they pay

The world's most incredible jobs and what they pay
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X