இந்திய அரசின் திங்க் டாங் ஆக விளங்கும் நித்தி அயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜீவ் குமார் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இருக்கும் 4கில் இரண்டு உறுப்பினர்கள் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து எதிர்ப்பும், நம்பிக்கையற்ற மனநிலையுடன் பேசியுள்ளனர்.
இதனால் பட்ஜெட் அறிக்கை மீது மக்களுக்கு இருந்த அதிர்ப்தி அதிகரித்துள்ளது.
தற்காலிகமானது..
பட்ஜெட் அறிவிப்புகள் சமானியர்களுக்கு எவ்விதமான பெரிய பலன்களும் அளிக்காத நிலையில் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில், தற்போது வெளியான உயர் அதிகாரிகளின் கருத்து எதிர்ப்புகளுக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது
பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய மாற்றங்கள் தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என நம்புகிறேன் நித்தி அயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
மேக் இன் இந்தியா
விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய ராஜீவ் குமார், நாங்கள் நினைத்ததைப் போல் மேக் இன் இந்தியா வெற்றி அடையவில்லை. இதன் காரணமாகப் பட்ஜெட் அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியும் விதித்து உள்நாட்டுத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பொருளாதார ஆலோசனை குழு
மேலும் பொருளாதார ஆலோசனை குழுவில் இருக்கும் 4 உறுப்பினர்களில் இரண்டு பேர் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுக்குறித்த கருத்துக்கள் பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இதில் முக்கியமாக 2 பேர் பட்ஜெட் அறிக்கையில் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சுர்ஜித் பல்லா மற்றும் ரத்தின் ராய்
பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரான சுர்ஜித் பல்லா LTCG வரி குறித்தும், ரத்தின் ராய் நிதி பற்றாக்குறை இலக்கை அடையமுடியாமல் விட்டதால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவித்துள்ளது.
வெறும் 5,000 கோடி ரூபாய்
10 சதவீத LTCG வரி தேவையற்றது. தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியின் மூலம் வெறும் 5,000 கோடி ரூபாய் மட்டுமே புதிய வரி வருமானம் பெற முடியும், ஆனால் பட்ஜெட் அறிக்கையில் 20,000 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்தைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனச் சுர்ஜித் பல்லா தெிவித்துள்ளார்.
வட்டி விகிதம்
இந்தியாவில் வட்டி விகிதம் குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது, ஆனால் மொத்த கடன் அளவு நாட்டிநன் ஜிடிபியில் 18 சதவீதமாக இருப்பதைக் காட்டி வட்டி குறைக்க ரிசர்வ் வங்கி மறுக்கிறது எனவும் ராஜீவ் குமார் கூறினார்.
இந்த நிலையில் கூட வட்டியைக் குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆதார்
எஸ்பிஐ
வீட்டு கடன்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications