சொந்தமாகக் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஓட்டி செல்லக்கூடிய சேவை அளிக்கும் ஜூம் கார் நிறுவனம் ஜேப் சப்ஸ்கிரைப் என்ற புதிய சேவையினைப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
ஜூம் காரினை ஒரு நாள், இரண்டு நாள் என ஒரு வாரம் வரை எடுத்து பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் தங்களுக்கு விருப்பான காரினை மாத கணக்கில் வாடகைக்கு எடுத்து பயன்படுதக்கூடிய சேவை தான் இந்த ஜூம் கார்.
இரண்டு சக்கர வாகனங்கள்
இதே போன்று இரண்டு சக்கர வாகனங்களை ரெண்ட் மோஜோ போன்று பல நிறுவனங்கள் வாடகைக்கு அளித்து வரும் நிலையில் தற்போது ஜூம்கார் புதிதாக இணைந்துள்ளது.
கட்டணம் எவ்வளவு?
ஜூம்காரினை தற்போது 6 மாதம் முதல் 24 மாதங்கள் வரை சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்தக்கூடிய திட்டங்கள் அறிமுகம் செய்துள்ளது. குறைந்தது ஒரு மாதத்திற்குக் காரை வாடகைக்கு எடுக்க 18,999 ரூபாய் என்றும், பராமரிப்பு செலவுகளும் இதில் அடங்கும் என்றும் ஜூம் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புக்கிங்
அதே நேரம் பயணத் தூரத்தில் எந்த வரம்பும் கிடையாது. புக் செய்யும் போது 48 மணி நேரத்திற்குள் புக் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications