இந்தியாவின் முக்கியப் பிஸ்னஸ் பள்ளிகள் மற்றும் ஐஐஎம் எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவையில் படிக்கும் மாணவர்களுக்கு ஜேக்பாட் தான் என்று கூறும் அளவிற்கு அதிகச் சம்பளத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களில் படிக்கும் மொத்த மாணவர்களுக்கும் சில நாட்களில் வேலைக் கிடைத்துள்ளது.
ஐஐஎம் கொல்கத்தா
ஐஐஎம் கொல்கத்தா தங்களது கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது, சம்பளம் என்றால் சும்மா இல்லை மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.
முக்கியக் கல்லூரிகள்
எக்ஸ்எல்ஆர்ஐ ஜேசேத்பூர் மற்றும் ஐஐஎம் லக்னோ மாணவர்கள் அனைவருக்கும் 4 நாட்களில் வேலைக் கிடைத்துள்ளது. ஐஐஎம் அகமதாபாத்தில் முதல் வேலை வாய்ப்பு முகாம் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது.
ஐஐஎம் பெங்களூரு
ஐஐஎம் பெங்களூரு மாணவர்களுக்கு வளாக நேர்முகத் தேர்வு துவங்கும் முன்பே 150-க்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாப்ய்ய்பு கிடைத்துள்ளது. இது மொத்த மாணவர்களில் 38 சதவீதம் ஆகும். இறுதிக்கட்ட வளாக நேர்முகத் தேவு இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
போஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG), பைன் & கோ, மெக்கின்சே & கோ மற்றும் ஏ.டி. கியர்னி, அக்சன்சர், ஜேபி மோர்கன் & கோ, பாங்க் ஆப் அமெரிக்காவின் மெர்ரில் லிஞ்ச், மோர்கன் ஸ்டான்லி, பெஸ்மேமர் வென்ச்சர் பார்ட்னர்ஸ், கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டி பேங்க், அவிண்டஸ் கேபிடல், ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ லிமிடெட், அமேசான், ஒய்யோ ஹோம்ஸ், ஆதித்யா பிர்லா குழுமம், ஐடிசி மட்டும் இல்லாமல் பல பொதுத் துறை நிறுவனங்களும் பணிக்கும் ஆட்களை இந்தக் கல்லூரிகளில் இருந்து எடுத்துள்ளனர்.
பிஸ்னஸ் பள்ளிகள்
சென்ற ஆண்டினை விட நடப்பு ஆண்டில் கூடுதலாக 30 சதவீதம் வரை வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது என்றும் ஐஐஎம் போன்ற முக்கியக் கல்லூரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பளம்
ஐஐஎம் கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு என்ன சம்பளம் கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறுவதில்லை என்றாலும் எக்ஸ்எல்ஆர்ஐ நிர்வாகம் தங்களது மாணவர்கள் சென்ற வருடம் வாங்கிய சராசரி ஆண்டுச் சம்பளமான 19.21 லட்சம் ரூபாயினை விடக் கூடுதலாக 20.1 லட்சம் வரை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய வேலை வாய்ப்பு சந்தை
இந்திய வேலை வாய்ப்புச் சந்தையில் ஐஐஎம் கல்லூரிகள் பெற்று இருப்பது பெறும் மாற்றத்தினைச் செய்யப்போவதில்லை என்றாலும் 2017-ம் ஆண்டினை விட 2018-ம் ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகளை மாணவர்கள் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
நவுக்ரி
வேலை வாய்ப்பு சந்தை நிலையான புத்தூயிற் பெற்று வருவதாகவும் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு, கார், பொறியியல் மற்றும் தொழில்துறை உற்பத்திகள் போன்ற துறையில் அதிக வேலை வாய்ப்பு கிடக்கும் என்றும் naukri.com இணையதளத்தின் மூத்த அதிகரி சுரேஷ் தமிழ் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications