முகேஷ் அம்பானி மட்டும் போதும்.. 20 நாட்களுக்கு இந்தியா ஜாலியா இருக்கலாம்..!
மும்பை: ஒரு நாள் முதல்வரை திரைப்படத்தில் பார்த்து இருப்பீர்கள். அதே போன்று ஒரு நாட்டின் கோடிஸ்வரர்களிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து எத்தனை நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும் என்று ப்ளும்பெர்க் ஒரு ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை 49 நாடுகளின் அரசியல் சூழல் செலவுகள் மற்றும் அங்குள்ள கோடிஸ்வரர்களின் 2017 டிசம்பர் மாதம் வரையிலான சொத்து மதிப்பு போன்றவற்றை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பட்டிலில் இடம்பெற்றுள்ள முக்கிய நபர்கள் குறித்த விவரங்களை மட்டும் இங்குத் தொகுத்து வழங்குகின்றோம்.
ஜாக் மா
சீன அரசின் தினசரி செலவு என்பது 11,205.20 மில்லியன் டாலர். ஜிடிபி 13,118.70 பில்லியன்.
அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஒரு சீன கோடிஸ்வரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவருடைய சொத்து மதிப்பு 45.5 பில்லியன் டாலர்கள். இதனை வைத்து ஜாக் மாவால் சீனாவில் 4 நாட்கள் வரை ஆட்சி புரிய முடியும்.
ஜெப் பிஸோஸ்
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையினைப் பில்கேட்ஸ் இடம் இருந்து தட்டிப்பறித்த அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பிஸோஸ் தனது 99 பில்லியன் டாலர் சொத்துக்களை வைத்து 5 நாட்கள் வரை அமெரிக்காவை ஆட்சி செய்ய முடியும்.
அமெரிக்க அரசின் ஒரு நாள் செலவு 19,642.10 மில்லியன் டாலர். ஜிடிபி 20,200.00 பில்லியன் டாலர் ஆகும்.
டீட்டர் ஷ்வார்ட்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த டீட்டர் ஷ்வார்ட்ஸ் சூப்பர் மார்கெட் மற்றும் ஹைப்பர் மார்கெட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆன டீட்டர் ஷ்வார்ட்ஸ் சொத்து மதிப்பு 24.3 பில்லியன் டாலர் ஆகும்.
ஜெர்மனி அரசின் ஒரு நாள் செலவு 4,507.90 மில்லியன் டாலர், ஜிடிபி 3,934.80 பில்லியன் டாலர். டீட்டர் ஷ்வார்ட்ஸ் ஜெர்மனியை 5 நாட்கள் வரை ஆட்சி செய்யலாம்.
அமானியோ ஒர்டேகா
ஸ்பெயின் நாட்டு கோடீஸ்வர் ஆன அமானியோ ஒர்டேகா ஆடை அணிகலன் ரீடெயில் நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.
இவருடைய சொத்து மதிப்பு 75.3 பில்லியன் டாலர். ஸ்பெயின் அரசின் ஒரு நாள் செலவு 1,583.60 மில்லியன் டாலர், ஜிடிபி 1,419.90 பில்லியன் டாலர். இவரால் ஸ்பெயினை 48 நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும்.
லி கா-ஷிங்
ஹாங் காங்கின் மிகப் பெரிய கோடீஸ்வரர் லி கா-ஷிங் முதலீட்டு நிறுவனத்தினை நிர்வகித்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு 34.7 பில்லியன் டாலர்.
ஹாங் காங் அரசின் ஒரு நாள் செலவு 181.5 மில்லியன் டாலர், ஜிடிபி 344.8 பில்லியன் டாலர். லி கா-ஷிங் ஹாங் காங்கினை 191 நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும்.
ஜான் ஃப்ரெட்ரிக்சன்
சைப்ரஸ் நாட்டு கோடிஸ்வரர் ஆன ஜான் ஃப்ரெட்ரிக்ஸ் ஷிப்பிங், மீன் பிடி நிறுவனம் போன்றவற்றை நிர்வகித்து வருகிறார். டாப் 10 பட்டியலில் இவரால் தான் அதிக அளவில் தனது நாட்டினை அதிகபட்சமாக 441 நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும். இவரது சொத்து மதிப்பு 10.4 பில்லியன் டாலர் ஆகும். சைப்ரஸ் அரசின் ஒரு நாள் செலவு 23.6 மில்லியன் டாலர், ஜிடிபி 23 பில்லியன் டாலர் ஆகும்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பனியின் சொத்து மதிப்பு 40.3 பில்லியன் டாலர்.
இந்திய அரசின் ஒரு நாள் செலவு 1,987.20 மில்லியன் டாலர், ஜிடிபி 2,644.20 பில்லியன் டாலர்.
முகேஷ் அம்பானியால் இந்தியாவினை அதிகபட்சமாக 20 நாட்கள் வரை தனது சொத்துக்களை வைத்து செலவுகளை கவனித்துக்கொள்ள முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications