விஜய் மல்லையா தலைமை வகித்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி 9,800 கோடி ரூபாய் நிலுவையில் வைத்துள்ள நிலையில், தற்போது இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று லண்டனுக்குச் சென்றுள்ளார்.
பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவரைக் கண்டுபிடித்து அமலாக்கத்துறை லண்டனில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தற்போது லண்டன் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளார்.

இந்நிலையில் தனது செலவிற்காகக் கூடுதல் நிதி ஒதுக்குமாறு விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்த நிலையில், தற்போது மல்லையாவிற்கு அளிக்கப்பட்டு வரும் 5000 பவுண்டு நிதியை 18,325 பவுண்டாக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூபாய் மதிப்பில் இது 16 லட்சம் ரூபாய். இது அவர் ஒரு வாரத்திற்குச் செலவு செய்யும் தொகை.
மேலும் சராசரியாக இந்தியர்களின் வருடாந்திர வருமானமே 1.07 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications