உலகின் மிகப் பெரிய பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்திற்கு சொந்தக்காரர் வால்ட் டிஸ்னி. இவர் சிறு வயதில் இருந்தே புகைப்படம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். அது மட்டும் இல்லாமல் இவர் அமெரிக்க ராணுவத்திலும் பணியாற்றியுள்ளார்.
ஆரம்பக் கட்டத்தில் பல தோல்விகளைச் சந்தித்த வால்ட். பல முயற்சிகளுக்குப் பின் வால்ட் டிஸ்னி மற்றும் அவரது சகோதரர் ராய் இணைத்து முதன் முதலாக டிஸ்னி கார்ட்டூன்களை வெளியிட்டார்.

வால்ட் டிஸ்னி பல கற்பனை கதாப்பாத்திரங்களை உருவாக்கியிருந்தாலும், மிகப்பெரிய வெற்றி அடைந்தது "மிக்கி மவுசு" தான். இன்று அளவும் இது பிரபலமான ஒன்று. இதனைத் தொடர்ந்து உலகிலேயே முதன் முதலாக அனிமேஷன் படங்களைத் தயாரிக்க வித்திட்டார்.
அதன் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களைத் தயாரித்தார் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதித்தார் வால்ட் டிஸ்னி. பல வெற்றிகளைக் கடந்து டிஸ்னி லேண்ட் என்ற மாபெரும் தீம் பார்க்குகளைக் கட்டியமைத்தார். இதைத் தொடர்ந்து புளோரிடா மாகாணத்தில் கிடைத்தது 109 கிமீ அளவில் உலகின் மிகப் பெரிய தீம் பார்க் ஆன டிஸ்னி வேர்ல்ட்-ஐ உருவாக்கினார்.
இவரின் வெற்றிப் பாதையில் பல சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளதை வீடியோவில் பாருங்க..


Click it and Unblock the Notifications