2018 -2019 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த போது பாதுகாப்பு துறைக்கு எதிர்பார்த்த அளவிற்கு நிதிகளை ஒதுக்கவில்லை என்று குறை கூறி வந்தாலும் சர்வதேச அளவில் புதிய சாதனையினைப் படைத்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த திங்க் தாங்க் வெளியிட்ட அறிக்கையின் படி இங்கிலாந்தினை பின்னுக்குத் தள்ளிப் பாதுகாப்பு துறைக்காகப் பட்ஜெட் ஒதுக்கியதில் இந்திய அரசு 5வது இடத்தினைப் பிடித்துள்ளது.
இந்தியா
பாதுகாப்புத் துறைக்குப் பட்ஜெட் ஒதுக்குவதில் 5 வது இடத்தில் இருந்த இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளை 2016-ம் ஆண்டுச் செலவு செய்த 51.1 பில்லியன் டாலர் மதிப்பினை விட 2017-ம் ஆண்டு இந்தியா கூடுதலாக 52.5 பில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
இங்கிலாந்து
மறுபக்கம் இங்கிலாந்து 2016-ம் ஆண்டு 52.5 பில்லியன் செலவு செய்து இருந்ததாகவும் 2017-ம் ஆண்டு 50.7 பில்லியன் டாலர் வரை மட்டுமே செலவு செய்துள்ளது.
அமெரிக்கா
பாதுகாப்புத் துறைக்குப் பட்ஜெட் ஒதுக்குவதில் முதல் இடத்தினைப் பிடித்துள்ள அமெரிக்கா 150.5 பில்லியன் டாலரினை ஒதுக்கியுள்ளது. இந்தியா தற்போது வரை தங்களது இராணுவத்தினைப் புதுமைபடுத்த அதிகச் செலவு செய்து வருகிறது.
சீனா
2016-ம் ஆண்டினை விடச் சீன அரசு கூடுதலாக 25 சதவீதத்தினைப் பாதுகாப்பு துறைக்குச் செலவு செய்து இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது. அதே நேரம் இந்தியா 2.4 சதவீதம் மட்டுமே கூடுதலாகப் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கியுள்ளது.
சீனா - இந்தியா இராணுவம்
இந்தியாவுடன் ஒப்பிடும் போது சீன இராணுவத்தில் 6,00,000 நபர்கள் அதிகமாக உள்ளனர், 1,200 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் 785 மட்டுமே உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியாவை விடக் கூடுதலாக 55 போர்க்கப்பல்கள் சீனாவிடம் உள்ளது.
சவுதி அரேபியா
பாதுகாப்புத் துறைக்கு 76.7 பில்லியன் டாலரினை ஒதுக்கி பதுகாப்பு துறைக்கு அதிகம் பணம் ஒதுக்குவதில் மூன்றாம் இடத்தினைச் சவுதி அரேபியா பிடித்துள்ளது.
ரஷ்யா
பாதுகாப்புத் துறைக்காக 61.2 பில்லியன் டாலர் செலவு செய்ததுடன் 4வது இடத்தினை ரஷ்யா பிடித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications