பிரியங்கா சோப்ராவால் நீராவ் மோடிக்கு வந்த அடுத்த சிக்கல்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

நீராவ் மோடியின் ஆடம்பர வைர நகை கடையின் சர்வதேச விளம்பர தூதராக இருந்து வந்த பிரியங்கா சோப்ரா விளம்பரத்தில் நடித்ததற்காகத் தனக்கு அளிக்க வேண்டிய சம்பளத்தில் பாக்கி உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் துவங்கியுள்ளார்.

ஆடம்பர நகை கடை நடத்தி வரும் நீராவ் மோடி இந்திய பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல் ஹால்வுட் நட்சத்திரங்களை வரை தனது நட்பு வட்டாரத்தில் வைத்து வந்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது குழுக்கள் நீராவ் மோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறியது மட்டும் இல்லாமல் அவர் தங்களுக்குச் சம்பள பாக்கி வைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சித்தார்த் மல்ஹோத்ரா

இவரைப் போன்றே சித்தார்த் மல்ஹோத்ராவும் சம்பள பிரச்சனை காரணமாகவே நீராவ் மோடி நிறுவனத்தின் விளம்பர தூதர் பதவியில் இருந்து வெளியேறினார்.

நீராவ் மோடி

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீராவ் மோடி 11,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக நேற்று முதல் செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கும் நிலையில் இவருடன் நட்புறவில் இருந்த பாலிவுட் நட்சத்திரங்கள் செல்லும் காரணங்கள் ஆச்சர்யமாக உள்ளது.

தேடப்படும் குற்றவாளி

அமலாக்கத் துறை இன்று நீராவ் மோடிக்குச் சொந்தமான 13 இடங்களில் சோதனை செய்து வந்த நிலையில் விஜய் மல்லையா போன்றே தேடப்பட்டு வரும் குற்றவாளி என்று இவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Priyanka Chopra & Sidharth Malhotra sues Nirav Modi for non payment of dues also explores legal options

Priyanka Chopra & Sidharth Malhotra sues Nirav Modi for non payment of dues also explores legal options
Story first published: Thursday, February 15, 2018, 19:26 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns