லாபத்தில் 75% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் சன் பார்மா..!
இந்தியாவின் மிகப்பெரிய பார்மா நிறுவனமான சன் பார்மா, 2017-18ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் வர்த்தகத்தில் அதிகளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதேகாலக்கட்டத்தில் சன் பார்மா 1,471.82 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்திருந்த நிலையில், இந்த வருடம் அதிகளவிலான வரிச் செலவுகள் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளின் காரணமாக இந்நிறுவனத்தின் லாப அளவுகள் சுமார் 75 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

2017ஆம் ஆண்டில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சன் பார்மா வெறும் 365.4 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது.
இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகளும் 16 சதவீதம் அளவிற்குக் குறைந்து 6,653.23 கோடி ரூபாயாக உள்ளது


Click it and Unblock the Notifications