மும்பை, சூரத் மற்றும் டெல்லி என நீராவ் மோடிக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரிகள் உதவியுடன் 11,400 கோஇ ரூபாய் மோசடி செய்துள்ள நீராவ் மோடி மீது பஞ்சா நேஷ்னல் வங்கி அளித்துள்ள இரண்டு புகாரினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தப்பி ஓட்டம்
நேற்றா இது குறித்த விவரங்கள் வெளியான நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்க துறையின் தாமதமான நடவடிக்கையினால் இவர் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டார் என்ற தகவல்கள் கூறுகின்றன.
சோதனை
அதே நேரம் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை இடண்டும் சேர்ந்து நீராவ் மோடிக்கு சொந்தமான 13 இடங்களில் மும்பை, சூரத் மற்றும் டெல்லி மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றன.
வழக்கில் தொடர்புடையவர்கள்
இந்த வழக்கில் நீராவ் மோடி, அவரது மனைவி, அண்ணன் மற்றும் தாய் மாமா, பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை நிர்வாகி கோகுல்நாத் ஷெட்டி உள்ளிட்டவர்கள் முக்கியத் தொடர்புடையவர்கள் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
நீராவ் மோடி


Click it and Unblock the Notifications