7வது சம்பள கமிஷனுக்கான பரிந்துரைகள் ஒப்புதல் பெற்று சுமார் 9 மாதங்கள் ஆன நிலையில், தற்போது மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் பெற்ற பரிந்துரைகளை அமலாக்கம் செய்வதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
7வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் நிலையில் சுமார் 48 லட்ச மத்திய அரசு ஊழியர்கள் நன்மை அடைவார்கள்.
அடிப்படை சம்பளம்
தற்போது ஒப்புதல் பெற்றுள்ள பரிந்துரைகளின் படி கிரேட் ஸ்கேல் 1-5 வரையில் இருக்கும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் உயரும். இதன் மூலம் துவக்க நிலையில் இருக்கும் ஊழியர்கள் அதிகளவிலான நன்மை அடைவார்கள்.
துவக்க நிலை சம்பளம்
மத்திய அரசு பணிகளில் சேரும் துவக்க நிலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 7வது சம்பள கமிஷன் அமலாக்கத்தில் 7000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர உள்ளது.
அதிகப்படியான சம்பளம்
அதேபோல் 7வது சம்பள கமிஷனுக்குப் பின்பு கிளாஸ் 1 மத்திய அரசு ஊழியர்களின் துவக்க சம்பளமே 56,000 ரூபாயாக உயரும், அதேபோல் உயர் மட்ட அதிகாரிகளின் அதிகப்படியான சம்பளம் தற்போது இருக்கும் 90,000 ரூபாயில் இருந்து 2.5 லட்சம் வரையில் உயர உள்ளது.
ஜூன் 2017
7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுச் சுமார் 17 மாதங்கள் ஆனாலும் ஜூன் 2017இல் தான் மத்திய நிதியமைச்சகத்தால் ஒப்புதல் பெற்றது.
நன்மை
7வது சம்பள கமிஷன் அறிக்கையில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் முழுமையாக அமலாக்கம் செய்யப்படும் போது சுமார் 48 லட்ச மத்திய அரசு ஊழியர்கள், 58 லட்ச ஓய்வூதியதாரர்கள் நன்மை அடைவார்கள்.
ஏப்ரல் 2018
தற்போது கிடைத்த தகவல்கள் படி 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அனைத்தும் ஏப்ரல் 2018 முதல் அமலாக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது. ஆனால் சில அரசு ஊழியர்கள் ஜூன் அல்லது ஜூலை மாதம் அமலாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications