உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 702.5 பில்லியன் டாலர் சந்தை முதலீட்டு மதிப்புடன் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது. எனவே 699.2 பில்லியன் டாலர் மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனப் பங்குகள் புதன்கிழமை 2.6 சதவீதம் வரை உயர்ந்ததே மைக்ரோசாட் நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கான காரணம் என்று நியூ யார்க் போஸ்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆப்பிள்
ஆடம்பர ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் 849.2 பில்லியன் டாலர் சந்தை முலதனத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
கூகுள்
தேடு பொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆல்ப்பாபெட் 745.1 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பேஸ்புக்
உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தளமான மார்க் ஜூக்கர்பெர்கின் பேஸ்புக் 521.5 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் 5ம் இடத்தில் உள்ளது.
உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல்
உலகக் கோடீஸ்வர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை இரண்டாம் இடத்திற்கு அனுப்பிய ஜெப் பிஸோஸ் தற்போது நிறுவனத்தின் மூலதனத்திலும் மைக்ரோசாப்ட்-ஐ பின்னுக்குத் தள்ளியுள்ளார். ப்ளும்பெர்க் மற்றும் டோர்ப்ஸ் என இரண்டு நிறுவனங்களும் ஜெப் பிஸோஸை உலகின் மிகப் பெரிய கோடிஸ்வரர் என்று அறிவித்துள்ளன.
சொத்து மதிப்பு
1999-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு இருந்தது. தற்போது ஜெப் பிஸோஸ் இடம் 106 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளது.
அமேசான்
அமேசான் நிறுவனம் இ-காமர்ஸ் துறையில் ராஜாவாக உள்ள அதே நேரத்தில் மைக்ரோசாப்டின் கிளவுட் வணிகத்திற்கும் மிகப் பெரிய போட்டியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications