ரூ.11,300 கோடி கடனுக்கு 2 கோடி இன்சூரன்ஸ்.. பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் உச்சக்கட்ட மெத்தனம்..!

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கி, வைர வியாபாரியான நீரவ் மோடிக்கு சுமார் 11,300 கோடி ரூபாய் அளவிலான கடனை போலி ஆவணங்கள் வைத்துக் கொடுத்துள்ளது.

பொதுவாக வங்கியில் கொடுக்கப்படும் கடனுக்குக் காப்பீடு உள்ளது. இந்நிலையில் நீர்வ மோடிக்குக் கொடுக்கப்பட்ட கடனில் வெறும் 0.70 சதவீத தொகை அதாவது 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும் என வங்கி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

பொதுவாக அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வர்த்தகக் கடன், சைபர் பைனான்ஸ் ஆகியவற்றுக்குச் சிறப்பு இன்சூரன்ஸ் அளிக்கும், ஆனால் பஞ்சாப் நேஷ்னல் வங்கி இதைச் செய்யவில்லை.

கடந்த இரண்டு வருடமாக ஒரு கடனின் 40 சதவீத தொகைக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் காப்புறுதியை அளிக்கிறது. மீதமுள்ள 60 சதவீத தொகைக்கு இதர 3 அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்புறுதி அளிக்கிறது.

 

5 கோடி ரூபாய்

5 கோடி ரூபாய்

பஞ்சாப் நேஷ்னல் வங்கி 5 கோடி ரூபாய் அளவிலான இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை செலுத்துகிறது. ஆனால் இந்தத் தொகை இவ்வங்கியின் முழுமையான தொகைக்கான பிரீமியம் தொகையை விடவும் மிகவும் குறைவானது.

தற்போது நடந்துள்ள 11,300 கோடி ரூபாய் மோசடிக்கு வெறும் 2 கோடி ரூபாய் அளவிலான காப்பீடு மட்டுமே வைத்துள்ளது என யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

வெளிநாட்டு வர்த்தகத்திற்காக நீரவ் மோடியின் டிசைனர் வைர நகை நிறுவனமான நிர்வ மோடி -க்கு நிதி பரிமாற்றம் செய்யப் பல்வேறு வங்கிகளுக்கு LoU கடிதம் கொடுத்தது.

இதன் அடிப்படையில் ஆக்சிஸ் வங்கி, அலகாபாத் வங்கி, பாங்க் ஆஃ பரோடா ஆகிய வங்கிகள் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு நிதி பிரிமாற்றம் செய்யதது.

 

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்த 1.8 பில்லியன் டாலர் அல்லது 11,300 கோடி ரூபாய் அளவிலான நிதி பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் கடிதத்தின் பெயரிலேயே கொடுக்கப்பட்ட காரணத்தால், இந்தப் பணத்தை ஆக்சிஸ் வங்கி, அலகாபாத் வங்கி, பாங்க் ஆஃ பரோடா அல்லது எஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை வங்கிகளுக்குப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி தான் கொடுக்க வேண்டும் என அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 நிதிநிலை அறிக்கை

நிதிநிலை அறிக்கை

11,300 கோடி ரூபாயைப் பிற வங்கிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் நிதிஅறிக்கையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

 

 8000 கோடி ரூபாய்

8000 கோடி ரூபாய்

கடந்த 3 நாட்களில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் பங்குகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாகச் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை இழந்துள்ளது.

தடாலடி சரிவு

தடாலடி சரிவு

திங்கட்கிழமை வர்த்தகத்தில் 161.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் பங்குகள் இன்று காலை முதல் தொடர் வர்த்தகச் சரிவை சந்தித்தது.

இன்று காலை வர்த்தகத்தில் இவ்வங்கியின் பங்குகள் 2.92 சதவீதம் வரையில் சரிந்து 124.45 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+