ஜெட் ஏர்வேஸ் அதிரடி.. உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 20% சலுகை..!
ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் பயணம் செய்ய 20% சலுகையினை அறிவித்துள்ளது. பிரீமியர் மற்றம் எக்கானமி வகுப்புப் பயணங்களில் இந்தச் சலுகைகளைப் பெற முடியும்.

விமான டிக்கெட்கள் jetairways.com என்ற இணையதளத்தின் மூலமாகச் சலுகை விலையில் பெற முடியும். சலுகை விலையில் 2018 பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வரை புக் செய்து 2018 பிப்ரவரி 24 முதல் 2018 மார்ச் 24 வரை பயணங்களைச் செய்யலாம்.
பிரிமியர் வகுப்பு டிக்கெட்களைப் புக் செய்யும் போது அடிப்படை டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதமும், எக்கானமி வகுப்பில் 10 சதவீத அடிப்படை கட்டணமும் சலுகை விலையில் அளிக்கப்படும்.
மேலும் இந்த டிக்கெட்களைப் பயணத் தேதிக்கு 7 நாட்கள் முன்பு புக் செய்தால் மட்டுமே சலுகைகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications