இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் மத்தியிலான போட்டி குறையாமல் இருக்கும் வரையில் மக்களுக்கு லாபம் தான்.
ஆம், இரு நிறுவனங்கள் மத்தியிலான போட்டியின் காரணமாக 1 ஜிபி 3ஜி டேட்டா 150 முதல் 200 ரூபாய் வரையில் விற்கப்பட்டது, தற்போது மாதம் முழுவதும் ஒரு நாளுக்கு 1 ஜிபி 4ஜி டேட்டாவே வெறும் 400 ரூபாய்க்குக் கிடைக்கிறது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ஜியோவை கலங்கடிக்கும் வகையில் வெறும் 9 ரூபாய்க்கு அதிரடி ஆஃபர்களையும் சேவைகளையும் அறிவித்துள்ளது ஏர்டெல்.
கட்டண குறைப்புகள்
சில காலாண்டுகள் முன்பு வரையைக் கட்டணத்தைக் குறைக்க ஏர்டெல், ஐடியா, வோடாபோன் உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் கட்டணத்தைக் குறைக்க மனமில்லாமல் மிகவும் குறைவான அளவிலான குறைப்பை மட்டுமே அறிவித்தது.
விஸ்பரூபம்
சமீபத்தில் இன்டர்கனெக்ஷன் கட்டணத்தையும் டிராய் குறைத்த பின்பு இது ஜியோ அதிக லாபம் பெற மிகப்பெரிய வாய்ப்பாக எடுத்துக்கொண்டது. இதன் வாயிலாக ஏர்டெல் சில உறுதியான முடிவுகளை எடுத்தது.
அதிரடி அறிவிப்புகள்
இதன் வாயிலாக ஜியோவிற்குப் போட்டியாக ஒரு நாளுக்கு 100எம்பி 3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் ஆகியவை வெறும் 9 ரூபாய்க்குக் கொடுப்பதாக அறிவித்துள்ளது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இதனைத் தனியாகவும் அல்லது add-on பேக்-ஆகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஜியோ
அதேபோல் ஜியோ ஒரு நாளுக்கு 150எம்பி 4ஜி டேட்டா, டேட்டா அளவு முடிந்த பின்பு 64Kbps வேகத்தில் டேட்டா சேவையும், அன்லிமிட்டட் வாய்ஸ் கால், 20 எஸ்எம்எஸ் ஆகியவற்றை அளிப்பதாக அறிவித்தது.
போட்டி அறிவிப்புகள்
இந்நிஸையில் ஜியோவிற்குப் போட்டியாகவே ஏர்டெல் தற்போது 9 ரூபாய் ஆஃபரை அறிவித்துள்ளது.
தொடர் மாற்றங்கள்
இது மட்டும் அல்லாமல் ஏர்டெல் ஜியோவிற்குப் போட்டியாகவே தனது பிற திட்டங்களிலும் அதிகளவிலான மாற்றங்களை அறிவித்து வருகிறது.
இதனால் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது லாப, நஷ்ட அளவுகளைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து கட்டண குறைப்புகளை அறிவித்து வருகிறது.
கடன் பிரச்சனை
ஏற்கனவை கழுத்து வரையில் கடன் நெருக்கடியில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் இந்தத் தொடர் கட்டண குறைப்புகளை அறிவித்து வருகிறது. இதனால் இந்நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஆர்காம்
சில வாரங்கள் முன்பு முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மிகப்பெரிய கடன் நெருக்கடியில் இருந்து தப்பித்தது நாம் மறந்திருக்க முடியாது.
காஸ்ட்லியான சரக்கு
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications