இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா, வாடகை கார் சேவை வழங்கும் ஜூம்கார் நிறுவனத்தின் இந்திய கிளை மற்றும் அமெரிக்க கிளையில் முதலீடு செய்துள்ளது.
ஜூம்கார் இந்திய நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமாக திகழ்கிறது ஜூம்கார் இன்க்.

இந்நிலையில் ஜூம்கார் இன்க் நிறுவனத்தில் மஹிந்திரா சுமார் 176 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. இதன் மூலம் ஜூம்கார் இன்க் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகளை மஹிந்திரா பெற்றுள்ளது.
கடந்த வருடம் மஹிந்திரா மற்றும் ஜூம்கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்கை பயன்படுத்த கூட்டணி சேர்ந்த நிலையில் தற்போது, இந்த முதலீட்டின் மூலம் வெற்றி கூட்டணி அடுத்தக்கட்ட வர்த்தக இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்புதிய கூட்டணியில் 500க்கும் அதிகமாக மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவின் 20 நகரங்களில் பயன்படுத்த இந்த கூட்டணி முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications