நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசத்தையே நாம் வர்த்தகப் பற்றாக்குறை என அழைக்கிறோம்.
ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகமாக இருந்தால் இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும், அதுவே இறக்குமதி அதிகமாக இருந்தால் நாணய மதிப்பு சரியும். இதுமட்டும் அல்லாமல் பொருளாதாரத்தையும் வர்த்தகச் சந்தையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும், அதோடு உலக நாடுகளின் தேவையை உணர்ந்து பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்பதும் உணர்த்தும் நிலை இது.
தற்போது இந்தியா இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில் தான் உள்ளது.
56மாத உயர்வு
இந்தியாவில் அதிகளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 16.3 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது.
இது கிட்டத்தட்ட 56 மாத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியக் காரணம்
ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வைரம் மற்றும் கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்துள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட அதிகமாக உள்ளது.
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் ஜனவரி மாதங்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் துவங்கியதும், வர்த்தகப் பற்றாக்குறை 56 மாதங்கள் அதிகமான நிலையில் இருப்பதற்கும் முக்கியக் காரணமாக உள்ளது..
வளர்ச்சி
காமர்ஸ் அமைச்சகம் வெளியிட்ட தகவல்களில் படி ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி அளவுகள் 9.1 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் விற்பனை பொருட்களின் இறக்குமதி 26.1 சதவீதமும், வைரம் மற்றும் இதர விலை உயர்ந்த கற்களின் இறக்குமதி 55.7 சதவீதம், பெட்ரோலியம் 42.6 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
10 மாதம்
கடந்த 10 மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 131 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் 88 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications