இந்திய இ-காமர்ஸ் துறையில் அமேசான் நிறுவனத்திற்கு மிகப் பெரிய போட்டியா இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னால் ஊழியர் ஒருவரை அமேசான் பணிக்கும் எடுத்துள்ளது.
மாயன்க் ஜெயின் என்பவர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் நிதி சேவைகளின் தலைவராக இருந்து தற்போது பஜாஜ் ஃபினாஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் அமேசான் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

அமேசான் இந்தியா நிறுவனமும் மாயன்க் ஜெயின் பணிக்கு சேர்ந்து இருப்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் என்ன பணிக்காக இவரைத் தேர்வு செய்துள்ளனர் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.
மாயன்க் ஜெயின் பிளிப்கார்ட் நிறுவனத்தில் கிரெடிட் வடிவமைப்பு, செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவுகள் சார்ந்த நிதி சேவைகளை நிர்வகித்து வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் பிளிப்கார்ட்டின் பை நவ் பே லேட்டர் திட்டத்தினை இவர் தான் அறிமுகம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications